COVID-19 Update: அக்டோபர் 6; 1432 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1432 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2021, 08:04 PM IST
  • தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 1432
  • இன்றைய கோவிட் பலி 25 பேர்
  • கொரோனாவின் பிடியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் விடுபட்டவர்களின் எண்ணிக்கை 1519
 COVID-19 Update: அக்டோபர் 6; 1432 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் பலி title=

சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1432 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 25 பேர் இறந்தனர். தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும், அரசு மருத்துவமனைகளில் 21 பேரும் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,707  ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,637 ஆக உள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,519 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர்.இன்று மொத்தமாக 1,45,338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,449 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ | அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா மூன்றாம் அலை, இலக்கில் குழந்தைகள்: நிபுணர் குழு எச்சரிக்கை

இன்றைய நிலவரம்: 

• இன்றைய பாதிப்பு - 1,432

• இன்றைய மரணங்கள் -25

• மொத்த பாதிப்பு -  26,72,843

• இன்றைய டிஸ்சார்ஜ் -   1,519

• இன்றைய சோதனைகள் - 1,45,338

Also Read | Covid Toe: கோவிட் டோ வந்தால் சிகிச்சை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News