COVID-19 vs Elephants: முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை
முதுமலையில் தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டன, அதில் எந்தவொரு யானைக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது
முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு முகாமில் உள்ள 28 காட்டு யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. யானைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யானைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், கடந்த ஜூன் 8 செவ்வாய்க்கிழமையன்று உத்தரபிரதேச இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Indian Veterinary Research Institute, Uttar Pradesh) அனுப்பப்பட்டன.
சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு அருகிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த 11 சிங்கங்களில் ஒன்பதுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக விலங்குகளுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதையடுத்து, முதுமலையில் தெப்பக்காடு முகாமில் உள்ள யானைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டன. தெப்பக்காடு யானை முகாம், நாட்டின் மிகப் பழமையான ஒன்றாகும், இது 1927 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்குள்ள யானைகளில் எதற்கும் நோய்த்தொற்று அறிகுறி எதுவும் இல்லாத போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்யப்பட்டன.
Also Read | COVID-19: முதலில் வண்டலூர் சிங்கங்கள்; இப்பொழுது முதுமலை யானைகளா..!!
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஐந்து சிங்கங்களுக்கு இருமல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தன.
தெப்பக்காடு யானை முகாமில் உள்ள அனைத்து யானைகளுக்கும் கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டன, அதில் எந்தவொரு யானைக்கும் நோய்த்தொற்று இல்லை என்று உறுதியானது என முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் கே.கே.கெளஷல் தெரிவிக்கிறார்.
"இருந்தாலும்கூட நாங்கள் பாதுகாப்பைக் குறைக்க மாட்டோம், தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் நெறிமுறைகளையும் தொடர்ந்து உறுதியுடன் பின்பற்றுவோம்" என்று அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் முக்கோண சந்திப்புக்கு அருகில் உள்ளது. இங்கு, பல்வேறு வகையான அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வசிக்கின்றன. புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி போன்ற விலங்குகள் வசிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதால், முதுமலை உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
Also Read | Elephant family: 500 கி.மீ வீதியுலா வரும் சீனாவின் யானை மந்தைகள் Viral
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR