கரூர் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாவது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழா மற்றும் புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா, புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணி கலந்து கொண்டார்கள். தொடர்ந்து 146 இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு பெற்றோர்களுடன் பட்டத்தை வழங்கினார் அமைச்சர் மா. சுப்பிரமணியம். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் விரைவில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டதை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப்படும், தனியார் மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் வரை முழு உடல் பரிசோதனை செய்ய செலவாகிறது. இந்த திட்டம் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும், இதன் மூலம் தமிழகம் முழுவதும் 1256 முகாம் நடைபெற உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் இந்த நடத்தி முடிக்கப்பட்டு மருத்துவ துறையில் ஒரு மருத்துவ புரட்சி செய்ய முதல்வர் திட்டமிட்டு உள்ளார் என்றார்.
மேலும் படிங்க: பெண்களே... 8% வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!
புதுக்கோட்டையில் அமைச்சர் பேச்சு!
உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய பதட்டத்தை உருவாக்க கூடாது. கொரோனாவை பொருத்தவரை 2019 இறுதியில் இருந்து ஆல்பா பீட்டா டெல்டா டெல்டா பிளஸ் காமா காமா பிளஸ் ஒமேக்ரான் போன்ற தொடர் உருமாற்றங்களை பெற்று வந்தது. தற்போது வந்துள்ள கொரோனா பாதிப்பை பொறுத்தவரை 19 மாதிரிகள் புனேவில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் தற்போது பரவும் கொரோனா ஒமேக்ரானில் ஒரு வகை . இந்த வைரஸ் வீரியமற்ற வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூன்று நாட்களில் இருந்து தொண்டை வலி சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும். பொதுமக்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் சுகாதார துறை அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தீராத காய்ச்சல் நீண்ட நாள் தொண்டை வலி சளி சரியாகாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்களுக்கு பொதுவான அறிவுறுத்தலோ விதியோ சட்டமோ கட்டாயமா எதுவும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தவர்கள் பொது இடத்திற்கு செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை ஆனால் அது நல்லது. இந்திய அளவிலும் சரி தமிழகத்திலும் சரி கொரோனாவால் தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. கேரளாவில் நம்மை விட நாள் ஒன்றுக்கு பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கும் கொரோனா உயிரிழப்பு இல்லை.
ஏற்கனவே ஏற்பட்ட ஒரு இரண்டு உயிரிழப்புகளை பொறுத்தவரை ஏற்கனவே இதயம் சிறுநீரகம் பாதிப்பு போன்ற இணை நோய்களோடு எந்த மருத்துவமனை தனியார் மருத்துவமனை உட்பட எங்கு அனுமதித்தாலும் வாழ்வின் இறுதி கட்டம் என்று சொல்லும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது கொரோனா உள்ளிட்ட 12 13 வகையான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்று இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாக கருத முடியாது. அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த அவசியமும் இல்லை கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை விதிக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: நாங்களும் அதிக தொகுதிகளை கேட்போம்... திமுகவுக்கு திடீர் குண்டைபோடும் திருமா!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









