செயினை அறுக்க முயன்ற திருடர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 01:12 PM IST
  • வழிப்பறி திருடர்கள் இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர்.
  • கொள்ளையர்களையும் பிடித்து கைகளை கட்டி அழைத்து வந்து நெடுவாசல் கடைவீதியில் வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
செயினை அறுக்க முயன்ற  திருடர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! title=

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் ரேகா.இவர் நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்றும் ஆசிரியர் ரேகா கீரமங்கலத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் ஆவணம் வழியாக நெடுவாசல் பள்ளிக்கு சென்றபோது ஆவணம் சிவன் கோயில் அருகே இவரைப் பின் தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் ஆசிரியை ரேகாவின் கழுத்தில் கிடந்த தங்க செயினை அறுக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது சாதுர்த்தியமாக செயல்பட்ட ரேகா தனது செயினை இறுக்கிப் பிடித்துக் கொண்டதால் நகையை அறுக்க முடியாத சூழ்நிலையில், கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்ததை அறிந்த வழிப்பறி திருடர்கள் இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாக நெடுவாசல் நோக்கி சென்றனர்.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த அலமேலு என்ற மூதாட்டியிடம் கழுத்தில் கிடந்த செயினையும் அறுத்துள்ளனர் . ஆனால் அது கவரிங் செயினாக இருந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த நெடுவாசல் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களையும் விரட்டி சென்றுள்ளனர்.

தங்களை பொதுமக்கள் விரட்டுவதை அறிந்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவரும் நெடுவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக செல்லும் சாலையில் தப்பிச்செல்ல முயன்ற போது சாலை ஒரு குளத்துடன் முடிவடைந்ததால் வேறு வழியின்றி தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு வயல்வெளிகளுக்குள் புகுந்து இரண்டு கொள்ளையர்களும் தப்ப முயன்றுள்ளனர்.

மேலும் படிக்க | புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி

இதனைப் பார்த்த நெடுவாசல் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வயல்வெளிகள் மற்றும் ஆற்றங்கரை முழுவதும் சுற்றி வளைத்தனர்.
அப்போது அவ்வழியாக செல்லும் கல்லணை கால்வாய் அருகே உள்ள புதரில் பதுங்கி இருந்த இரண்டு வழிப்பறி கொள்ளையர்களையும் பிடித்து கைகளை கட்டி அழைத்து வந்து நெடுவாசல் கடைவீதியில் வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

இதன்பின் தகவலின் பெயரில் அங்கு வந்த வடகாடு போலீசார் அந்த இரண்டு வழிப்பறி கொள்ளைகளையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இரண்டு வழிப்பறி திருடர்களும் விருதுநகர் மாவட்டம் வளையன்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன், ரஞ்சித் என்பதும் இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த வடகாடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுவாசல் பகுதியில் பள்ளி ஆசிரியையின் செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | மகளை டார்ச்சர் செய்த மருமகன்..! தட்டிக்கேட்ட மாமனாரை குத்திப் போட்ட சந்தேக பேய் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News