CUET UG 2025: நாடு முழுவதும் முழுவதற்குமான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான கியூட் தேர்வை (CUET-UG) தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் (CUET UG 2025) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
CUET UG 2025: தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான CUET-UG தேர்வு வருகின்ற மே 8ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதிவரை நடைபெறும் என தற்காலிகமாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதிவரை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
CUET UG 2025: 13 மொழிகளில் தேர்வு...
கணினி அடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
CUET UG 2025: தேர்வு கட்டணம் எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு?
3 பாடங்கள் வரை விண்ணப்பிக்க கட்டணம், பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாய், ஓபிசி-என்சிஎல் (OBC-NCL)/இடபிள்யூஎஸ் (EWS) பிரிவினருக்கு 900 ரூபாய், எஸ்சி/எஸ்டி/மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 800 ரூபாய் வசூலிக்கப்படும்.
3 பாடங்களுக்கு மேல் கூடுதலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பாடங்களுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பொதுப்பிரிவினருக்கு 400 ரூபாய், ஓபிசி-என்சிஎல் / பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 375 ரூபாய், எஸ்சி/எஸ்டி/ மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ.350 வசூலிக்கப்படும்.
CUET UG 2025: திருவாரூரில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள்
தமிழ்நாட்டில் மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூரில் செயல்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு செப்டம்பர் 2009ஆம் ஆண்டு முதல் திருவாரூரில் இருந்து செயல்பட்டு வருகிறது. திருவாளூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வழங்கப்படும், இளங்கலைப் பட்டப் படிப்புகளின் விவரங்களை இங்கு காணலாம்
- இளங்கலை அறிவியல் - 4 ஆண்டுகள்: வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல், கணிதம், இயற்பியல், (B.Sc Honours / Research)
- இளங்கலை பொருளாதாரம் - 4 ஆண்டுகள்: (B.A Honours / Research)
- இளங்கலை இசை - 4 ஆண்டுகள்: (B.P.A Honours / Research)
- இளங்கலை - 3 ஆண்டுகள்: ஜவுளி (B.Sc) ஜவுளி தொழில் நுட்பவியல் (B.Sc), ஜவுளி வணிகப் பகுப்பாய்வு (BBA)(கோயம்புத்தூரில் உள்ள SVPISTM நிறுவனத்தில் வழங்கப்படுகிறது).
CUET UG 2025: புதிய விதி மாற்றங்கள் என்ன?
12ஆம் வகுப்பில் மாணவர்கள் எந்த பாடத்திலும் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம் என இந்தாண்டு முதல் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள்படி, 12ஆம் வகுப்பில் படித்த பாடப்பிரிவைதான் உயர்கல்வியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், CUET-UG தேர்வில் 12ஆம் வகுப்பில் பாடப்பிரிவிற்கு ஏற்ற பாடங்கள் என்று இல்லாமல், மாணவர்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து அதற்கான தகுதியான பாடங்களுக்கான தேர்வை எழுதலாம்.
உதாரணத்துக்கு ஒரு மாணவர் 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்து படித்திருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டங்களில் வரலாறு படிக்க வேண்டும் என்றால் க்யூட் தேர்வில் அதற்கான தகுதி பாடங்களை தேர்வு செய்து தேர்வு எழுதினால் அவர் வரலாறு படிக்கலாம்.
அதேபோன்று 12ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படித்திருந்து, இளங்கலையில் இயற்பியல் அல்லது வேதியல் அல்லது ஏதோ ஒன்று அறிவியல் பாடம் பிரிவு படிக்க விருப்பப்பட்டால் அதற்கான தகுதி பாடங்களை எடுத்து தேர்வு எழுதி விரும்பக்கூடிய பாடங்களை இளங்கலை பிரிவில் படிக்கலாம். மேலும் இதுகுறித்த மேற்கொண்ட விவரங்களை. https://cuet.nta.nic.in/ என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் முதல்முறையாக... முதல்வரின் மெகா திட்டம் - என்ன தெரியுமா?
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்பு பெறுவது எப்படி? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியாகப்போகும் குட் நியூஸ்! ரூ.1000 உறுதி மக்களே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









