அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2025, 11:17 AM IST
  • இன்று 110 விதியின் கீழ் ஸ்டாலின் அறிவித்தார்.
  • இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • ஓய்வூதியதாரர்களும் இந்த அறிவிப்புகளால் பயன்பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்

Tamil Nadu Government News: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு (TN Government Employees) ஒன்பது முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 28) வெளியிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu Government: சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு 

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin),"திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து எண்ணற்ற மக்கள் திட்டங்களும் பல்வேறு துறைகள் சார்ந்த திட்ட பணிகளும் பாராட்டுத்தக வகையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு பலவகையில் முதலிடத்திலும் முன்னோடி மாநிலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களின் சீரிய பங்களிப்பும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

அரசின் திட்டங்கள் மக்களுடைய சென்றடைய அரசு ஊழியர்கள் பாலமாக இருக்கிறார்கள், அவர்களை பாராட்டி மகிழ்கிறேன். அரசு ஊழியர்கள் நலம் கருதி ஒன்பது அறிவிப்புகள் (9 Announcements For Government Employees) வெளியிடுகிறேன்.

Tamil Nadu Government: 9 அறிவிப்புகள் என்னென்ன?

- அறிவிப்பு 1

 அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 2025 அக்டோபர் 1ஆம் தேதி வரை, சரண் செய்து பண பயன் பெறலாம். 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெரும் இந்த அறிவிப்பை  செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3,561 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

- அறிவிப்பு 2

மாநில அரசு பணியாளர்களுக்கு 2025ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி (Dearness Allowance) இரண்டு விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். 16 லட்சம் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இதனால் பயன்பெறுவார்கள். இதை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,252 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

- அறிவிப்பு 3

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு (Teachers) வழங்கப்பட்டு வரும் பண்டிகை காலம் முன்பணம் (Bonus) 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.  

- அறிவிப்பு 4

அரசு பணியாளர் குழந்தைகள் உயர்கல்வி பயில வழங்கப்படும் கல்வி முன்பணம்  இந்த ஆண்டில் இருந்து தொழிற்கல்வி பயில 1 லட்சம் ரூபாயும், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளை பயில 50 ஆயிரம் ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும்.

- அறிவிப்பு 5

பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம், 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

- அறிவிப்பு 6

பொங்கல் பண்டிகைக்கு c மற்றும் d பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கு அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) வழங்கப்படும் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 74 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். 

- அறிவிப்பு 7

ஓய்வூதியதாரர்கள் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில்,  பண்டிகை கால முன்பணம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 10 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

- அறிவிப்பு 8

பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட குழு அமைத்து அந்தக் குழு தனது அறிக்கை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணை இடப்பட்டுள்ளது. 

- அறிவிப்பு 9

திருமணமான அரசு ஊழியர்களுக்கு மகபேருக்காக விடுப்பு காலத்தினை தகுதிக்கான பருவத்திற்கான கணக்கில் எடுத்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: எதில் அதிக மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்? கணக்கீடு இதோ

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் புதிய திட்டம்.. ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10000 பென்ஷன்!

மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: 3 ஓய்வூதிய திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளின் பட்டியல் இதோ
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News