Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி படித்தவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தால் மாத உதவித்தொகை வழங்கி வருகிறது. அவரவர் படித்த படிப்புகளுக்கு ஏற்ப இந்த உதவித்தொகை கிடைக்கும். டிகிரி முடித்தவர்களாக இருந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுவும் படித்த டிகிரி முடித்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளியாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் https://tnvelaivaaippu.gov.in என்ற வெப்சைட்டில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இப்போது, செங்கலப்பட்டு, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெளியாகியிருக்கும் அறிவிப்பு குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
செங்கல்பட்டு - வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.01.2026 முதல் 31.03.2026 வரையிலான காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (பொது) மற்றும் படித்த வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, நாளது தேதி வரை பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, 31.12.2025 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விதிமுறை
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், B.Sc. Nursing போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் (PROFESSIONAL DEGREE) முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. அரசின் பிற துறைகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பிற உதவித்தொகை பெற்று வருபவர்கள் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள மனுதாரர்கள் (பொதுப்பிரிவினர்) தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்குட்பட்டும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குட்பட்டும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் ஆண்டு வருமானத்தில் வரம்பு ஏதுமில்லை.
அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர். உதவித்தொகை விவரம் :
* பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு - ரூ.600/- மாதம்
* +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு ரூ.750/- மாதம்
* பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகளுக்கு - மாதம் ரூ.1,000/-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விவரம் :
* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் - மாதம் ரூ.200/
* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் - ரூ.300/-
* +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு - மாதம் ரூ.400/-
* பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகளுக்கு - மாதம் ரூ.600/-
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள். தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2026-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்யர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட அறிவிப்பு
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத / தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். 01.01.2026 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும். இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf-என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கிகணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் மேற்படி சான்றுகளுடன் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகைபுரிந்து விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்குமாறும், மேலும், விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று மூன்றாண்டு முடிவுற்ற பொது பிரிவினரும் பத்தாண்டுகள் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும் ஏற்கனவே, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்களும், வெவ்வேறு துறையில் பணியாற்றிய / பணியாற்றும் நபர்களில் தொழிலாளர் வைப்புநிதி பிடித்தம் செய்யப்பட்டவர்களும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு முக்கிய அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









