Tamil Nadu Government : தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க இருக்கிறது. இதனையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பருவமழை காலங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுப்பது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்களை இப்போது தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் டெங்கு. மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் டெங்கு காய்ச்சல் பொது மக்களுக்கு வராமல் பாதுகாத்து கொள்ள கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
டெங்கு காய்ச்சல், மலேரியா பாதுகாப்பு நடவடிக்கைகள்
டெங்கு காய்ச்சல், ஏடிஸ் என்னும் கொசு கடிப்பதால் பரவுகிறது. இக்கொசுவானது சுத்தமான நீரில் வீட்டில் பயன்படுத்தப்படும் நீர் கலன்களிலும் வீட்டை சுற்றி இருக்கும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பானைகளில் காணப்படும் மழைநீரிலும் இக்கொசு உற்பத்தியாகிறது.
பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை
இக்கொசு உற்பத்தியை கட்டுப்படுத்திட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் அனைத்து நீர் வைத்திருக்கும் கலன்களை மூடி வைப்பதுடன் கழுவி சுத்தம் செய்திட வேண்டும். மேலும் வீட்டிலுள்ள மேல்நிலை தொட்டி மற்றும் தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் உள்ள நீரினை கொசு புகா வண்ணம் மூடி வைப்பதுடன் வாரம் ஒரு முறை பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். வீட்டில் உள்ள குளிரூட்டிகள், குளிர் சாதன பெட்டியின் பின்புறம் தொடர்ந்து நீர் இல்லா வண்ணம் பராமரிக்க வேண்டும், வீட்டை சுற்றி தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பானைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க 'அப்புறப்படுத்த வேண்டும்.
உடனடியாக சிகிச்சை பெற அறிவுறுத்தல்
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளில் திரைச்சீலைகள் மற்றும் கொசு வலைகளை கொண்டு வீட்டின் உள் கொசு உள்ளே வருவதை தடுத்திட வேண்டும். காலை மாலை நேரங்களில் கொசு கடிக்காமல் இருப்பதற்கு நீண்ட முழுக்கை சட்டை, நீண்ட கால்சட்டை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி உள்ள செடிகள், புதர்களை அகற்றி சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன் மழைநீர் தேங்காமல் பராமரித்திட வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் தங்கள் வீட்டிற்கு வரும்பொழுது முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். வீட்டில் யாரேனும் காய்ச்சல் பாதிப்பு அடைந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை 'மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுதல் வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | பெண்களே காத்திருத்தது போதும்! 2 மாதங்களில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | தீபாவளிக்கு பள்ளிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









