மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
மயிலாடுதுறை புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி நாளை நடைபெறுகிறது. கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக ஐதீகம்.
இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் தீர்த்தவாரி நடபெறுவது வழக்கம். ஐப்பசி மாதம் 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள் உற்சவமாக சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 7ம் தேதி சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துலா உற்சவம் தொடங்கியது, துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி நாளை மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.
ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்
சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர் என்பதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இவ்விழாவில் பங்கேற்க அதிக அளவில் பக்தர்கள் கூடுவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக திருவாரூர், நாகை, தஞ்சை, ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். காவிரியில் பக்தர்கள் புனிதநீராடும் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 3 மிதவை படகுகளில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். தீர்த்தவாரி நடைபெறும்போது பொதுமக்கள் செல்போனில் செல்பி எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ALSO READ: Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செவ்வாய்க்கிழமை செல்வம் பெருகும் நாளாக இருக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR