)
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனூரை வடிவுடையம்மன் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள் வாத்துகள் உள்ளது இன்று காலை கோவில் குளத்தில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்துள்ளது காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
கோவில் குளத்தில் இறந்து மிதந்த மீன்களை ஊழியர்கள் வெளியே எடுத்து குவித்து வைத்திருந்தனர் குளத்தில் உள்ள தண்ணீரின் நிறம் பச்சை நிறத்தில் உள்ளதால் மாசு படிந்து இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர் ஒரு சில பக்தர்கள் அந்த குளத்தில் மீன்களுக்கு உணவு அளிப்பதாக நினைத்துக் கொண்டு கையில் கொண்டு வரும் தின்பண்டங்களை குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர் இது ஒரு புறம் இருக்க கோவில் குளத்தை கோவில் நிர்வாகம் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கோவில் குளத்தில் நீர் குறைந்ததை தொடர்ந்து குடிநீர் வாரியம் மூலம் சிறிய குழாய் அமைத்து கோவில் குளத்தில் நீரை நிரப்பி வருகின்றனர் அந்த நீரில் ரசாயனம் ஏதேனும் கலந்திருக்கிறதா அதனால் மீன்கள் செத்து மிதக்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
மீன்கள் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி இறந்த திட்டங்களை ஆய்வுக்கு அனுப்பி இறந்ததற்கு காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரம்ம தீர்த்த குளம் என்று அழைக்கப்படும் இந்த படத்தில் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் மீன்கள் இறந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.