)
Dindigul District Local News: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வாய்க்கால் தெரு பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி குழந்தைகள் வேண்டாம் என குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை கொண்ட பெண்மணிக்கு, அடுத்த நாளே அவ்ரது மகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன், பாத்திர வியாபாரி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், சாராஶ்ரீ என்ற மகளும், இரண்டரை வயதில் துரைப்பாண்டி என்ற மகனும் உள்ளனர்.
குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: காயத்ரி அரசு மருத்துவமனைக்கு சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் முனியப்பன் இன்று வியாபாரத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
மகன் துரைப்பாண்டியை காணவில்லை: அப்போது சிறுவன் துரைப்பாண்டி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து துரைப்பாண்டியை காணவில்லை என அவனது தாய் காயத்திரி வீட்டை சுற்றி தேடி உள்ளார்.
அண்டாவிற்குள் மூழ்கிய துரைப்பாண்டி: அப்போது வீட்டின் வெளியே தண்ணீர் பிடித்து வைத்திருந்த அண்டாவிற்குள் துரைப்பாண்டி மூழ்கி கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காயத்ரி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் துரைப்பாண்டியை வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
கதறி அழுத தாய்: அங்கு துரைப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட துரைப்பாண்டியின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்தது.
மகன் பலியான சோகம்: தாய் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த மறுதினமே மகன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ