திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வான நிலையில் திடீரென திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் பாரதிராஜா பதவி விலகியுள்ளார்.


தேர்தலில் போட்டியிடாமல் தேர்வு செய்யப்பட்டால் ஏற்படும் சங்கடங்களை நான் உணர்வேன். ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். மூத்த இயக்குனராக சங்க வளர்ச்சிக்கு என் வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்று  ராஜினாமா குறித்து பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,


“கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில், நமது சங்க நிர்வாகிகள் இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்." என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த மாதம் இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது பாரதிராஜா அவர்களின் பதவி விலகலுக்கு பின்னர் திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.