)
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசை அறிவித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் கடைகள் வழியாக இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலருக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் தீபாவளி 2025 பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை விநியோகிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி இலவச வேட்டி சேலை
அதில் மாவட்டம், வட்டம், கிராமம், கடை குறியீடு, மின்னணு குடும்ப அட்டை எண் (UFC ) மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளி விவரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலின் படி இலவச வேட்டி மற்றும் சேலைகளை கிடங்குகளிலிருந்து தங்கள் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் செய்யப்படுவதனை மாவட்ட வழங்கல் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி இலவச வேட்டி சேலை விதிமுறை
நியாய விலைக் கடை பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக (ePOS) பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும். விரல் ரேகை, கருவிழி ரேகை இரு வழியாகவும் சரிபார்ப்பு தோல்வுயுறும் பட்சத்திலும் அங்கீகார சான்று மூலம் தற்சமயம் பொது விநியோக திட்ட பண்டங்கள் வழங்கப்படும் இடங்களிலும் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். அதன்படி உரிய எண் பெற்று விநியோகம் பதிவேட்டில் கையொப்பம் மற்றும் செல்பேசி மேற்கொள்ளலாம்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவது தொடர்பான சமூக பாதுகாப்பு திட்ட ஆணையரகத்திலிருந்து பெறப்படும் வழிகாட்டு கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதனை நெறிமுறைகளை பின்பற்றி கடந்தாண்டினை போன்று உறுதிப்படுத்தவும் மற்றும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் விநியோகிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு மகிழ்ச்சி
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த முதியோர் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு வீட்டில் இருக்கும் சூழலில், அவர்களுக்கு இம்முறை அரசே இலவச வேட்டி, சேலை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்ற பிள்ளைகளால் கவனிப்பின்றி இருக்கும் முதியோர்களுக்கு இந்த அறிவிப்பு பெரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தீபாவளி நாளில் ஓய்வூதியம் பெறும் முதியோர்களும் புத்தாடை அணிந்து மகிழும் சூழலை அரசு கொடுத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ