Diwali 2025 : அனைத்து வருடங்களும், தீபாவளி பண்டிகையானது இந்தியாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வண்ணமையமாக பட்டாசுகளுடன் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர்.
தீபாவளி 2025:
வழக்கமாக அனைத்து வருடங்களிலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தீபாவளி பண்டிகை ஆனது கொண்டாடப்படும். நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த இந்த நாளை தான் நாம் தீபாவளியாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் காலையில் எழுந்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பிடித்த உணவை சமைத்து சாப்பிட்டு, இனிப்புகளை செய்து அதை பிறருக்கு பரிமாறி மகிழ்ந்து கொண்டாடுவோம். இந்த நாளில் அரசும் ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது. பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உங்களது சொந்த பந்தங்களுடன் தீபாவளியை கொண்டாட காத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டும் முன்கூட்டியே கொண்டாடப்படுவது ஏன்?
தென்னிந்தியாவில் மட்டும் குறிப்பாக தமிழ்நாட்டில், தீபாவளி ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுவோம். தமிழ்நாட்டில், நரகாசுரனை வதம் செய்த நிகழ்வை, நினைவு கூர்ந்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள். இந்த முறை, தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை வருகிறது. தென்னிந்தியாவில் (சிறப்பாக தமிழ்நாட்டில்) நரகாசுரன் வதம் என்ற நிகழ்வை நினைவுகூர்ந்து நரகசதுர்த்தசி நாளை முக்கிய தீபாவளி நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
தென்னிந்தியாவில் தீபாவளி “நரகாசுரன் வதம்” (நரகசதுர்த்தசி) நாளில் ஆரம்பமாகும்; அதனால்தான் அது வட இந்தியாவை விட ஒரு நாள் முன்னரே கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன?
தீபாவளிக்கு முன்னதாக, உங்கள் வீட்டில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்து, தேவையற்ற குப்பைகளை வெளியில் வீசி விடுங்கள். பின்னர், தீபாவளி காலை கோலம் போட்டு அழகு படுத்துங்கள்.
புத்தாடை உடுத்தி, வீட்டில் விளக்கேற்றி மகிழ்ச்சியை பறிமாறலாம். வீட்டிலேயே சுழியம், பனியாரம், அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.
தீபாவளி காலையில் எழுந்து, நல்லெண்ணை வைத்து குளித்து, காலையில் நன்றாக சமைத்து சாப்பிடவும். உறவினர்கள் வீட்டிற்கு சென்று, மகிழ்ச்சிகளை பரிமாறிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | திங்கட்கிழமை வரும் தீபாவளி! எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









