)
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோழிக்கறி, ஆட்டுக்கறி மற்றும் மீன் ஆகியவை விற்பனை களைகட்டி வரும் நிலையில் திண்டுக்கல்லில் அதற்கு இணையாக வான்கோழி கறி விற்பனையும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பிரியாணி என்றாலே திண்டுக்கல் மாவட்டம் தான் நினைவுக்கு வரும், அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டன் சிக்கன் பிரியாணிக்கு அடுத்தபடியாக வான்கோழி பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு இன்று காலை முதல் வான்கோழி கறி விற்பனையானது நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் கறிக்கடைகளில் கூடி வான்கோழி கறிகளை வாங்கி சென்று வருகின்றனர். குறிப்பாக வான்கோழி நாட்டுக்கோழிக்கு இணையாக ரூபாய் 600க்கு விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் நாட்டுக்கோழி ரூ. 600க்கும், பிராய்லர் கோழி ரூ. 200க்கும், ஆட்டுக்கறி ரூ. 1000 முதல் 1200 வரை விற்பனையாகி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு வைர கிரிடமும், தங்ககவசம் சாத்தியும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தியும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
அதிகாலையிலயே கங்கா ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகள் அணிந்து பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தனர். இதேபோல் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவில், அழகர்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலுமே பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ