)
இன்னும் ஒரு நாள் மட்டுமே தீபாவளி பண்டிகைக்கு உள்ள நிலையில் மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகள் , வெளி வீதிகள், பத்துத்தூண், மஞ்சணக்காரத்தெரு, காமராஜர் சாலை, கீழவாசல், பைபாஸ் சாலை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தீபாவளி விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகரின் வர்த்தகப் பகுதியாக திகழும் விளக்குத்துண் பகுதியில் இன்று சனிக்கிழமை என்பதால் காலை முதலே மக்கள் குவியத் துவங்கினர் இந்நிலையில் தற்போது மாலை வேளையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மதுரை விளக்குத்தூண் பகுதியில் திறந்துள்ளதுமதுரை மாநகரின் வர்த்தகப் பகுதியாக திகழும் விளக்குத்துண் பகுதியில் இன்று சனிக்கிழமை என்பதால் காலை முதலே மக்கள் குவியத் துவங்கினர் இந்நிலையில் தற்போது மாலை வேளையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மதுரை விளக்குத்தூண் பகுதியில் திரண்டு உள்ளது.
மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி , திண்டுக்கல், விருதுநகர் , தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு வருகை தந்து குவிந்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது மதுரை மாநகரம்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி புத்தாண்டை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை பொருட்களை வாங்கி சென்று வருகின்றன.
விளக்கத்தூண் பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் தீபாவளி பண்டிகை விற்பனையாக புதிய ரக ஆடைகள் என பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் புத்தாண்டைகள் வாங்குவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி இறுதி கட்டப் பர்சேசிங்கை செய்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் குறைந்ததால் தற்போது மாலை வேளையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மதுரை விளக்குத்தூண் பகுதி நோக்கி தீபாவளி பர்ச்சேசிங் மேற்கொள்வதற்காக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
விளக்குத்துண் பகுதி முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி விற்பனையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மாசி வீதிகள் மற்றும் விளக்குத்தூண் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு மக்களின் நடமாட்டம் முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக வழங்கிவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ