)
Diwali Special 2025, How To Make Adhirasam: தீபாவளி தினம் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. சொந்த ஊர்களுக்குச் செல்வது தொடங்கி, புத்தாடை வாங்குவது, புதுப் படங்களை குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்ப்பது, அருகில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உடன் செல்வது என கொண்டாட்டங்கள் பலவிதம்.
அப்படியிருக்க, கடைகளில் இனிப்பு, பலகாரம் வாங்கி அதை பலருக்கும் பகிர்ந்து கொடுப்பதும் ஒருவிதமான தீபாவளி கொண்டாட்டமாக கருதப்படுகிறது. சிலர், முறுக்கு, வடை போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்து அதை வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி உற்றார் உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள என அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அந்த வகையில், இனிப்பு பலகாரமான அதிரசத்தை வீட்டிலேயே எளிமையாகவும், ருசியாகவும், ஊர் மணத்துடனும் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். திருநெல்வேலியில் பொதுவாக செய்யப்படும் பக்குவத்தில் அதிரசத்தை சுடுவது எப்படி என்பது விரிவாக பார்க்கலாம்.
பச்சரிசி - 1 கிலோ
மண்டை வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
கசாகசா - 5 கிராம்
ஜாதிக்காய் - 1
மைதா - 1 கிலோ
இந்த அளவில் அதிரசம் செய்தீர்கள் என்றால் அளவை பொருத்து 30 - 40 அதிரசத்தை சுடலாம். உங்களுக்கு தேவையான அளவில் அதிரசம் சுட, அதற்கேற்ற கணக்கில் பொருள்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
- பச்சரிசியை இரண்டு மணிநேரம் நன்கு ஊறவைத்து, பின்னர் நீரின்றி வடித்து, நன்கு உலர்த்த வேண்டும். பச்சரிசி உடன் ஏலக்காய், கசாகசா, ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்து பட்டாக திரிக்க வேண்டும்.
- பச்சரிசியை திரித்த பிறகு, 750 கிராம் மண்டவெல்லத்திற்கு 50 ml நீர் வைத்து, பாகு காய்ச்ச வேண்டும். தண்ணீரின் அளவு அதிகரிக்கவும் கூடாது, குறையவும் கூடாது. திரித்து வைத்திருக்கும் மாவில் 100 கிராம் மைதா சேர்க்கவும்.
- சற்று பெரிய பாத்திரத்தில் காய்ச்சிய பாகை நன்கு வடித்து ஊற்றவும். அடியில் கல் போன்ற கசடுகள் தேங்கியிருக்கும். எனவே, அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றும்போது சற்று கவனத்துடன் செய்யவும்.
- சிறிது சிறதாக திரித்து வைத்திருக்கும் மாவை, வெல்ல பாகு உடன் சேர்க்க வேண்டும். அதாவது, பாகு உடன் மாவை சேர்க்கும்போதே உடனுக்குடன் நன்கு கிண்டிவிட வேண்டும். இல்லையெனில் மாவு கட்டி கட்டியாக வருவதற்கும் வாய்ப்புள்ளது. இதை செய்யும்போது மிகுந்த கவனத்துடன் செய்யுங்கள்.
- மாவு மொத்தமும் சேர்த்து பிறகு நன்கு கிண்டிவிட வேண்டும். மாவு நன்கு இறுக்கமான பதத்திற்கு வந்த பிறகு அதை இரண்டு நாள்கள் அப்படியே வைக்கவும்.
- இரண்டு நாள்களுக்கு பின் அந்த மாவை எடுத்து அதிரசம் போடும்போது தான் அது நன்கு புளித்து, ருசியாகவும், பூரிப்புடனும் வரும். மாவை எடுத்து அதிரசம் போடும் முன் ஒரு சிட்டிகை அளவிற்கு சோடா உப்பு சேர்த்துக்கொள்ளலாம். மாவு போதிய அளவிற்கு இறுக்கமாக இல்லையெனில், சிறிதளவு மைதா சேர்த்துக்கொள்ளலாம்.
- அதிரசத்தை சுடுவதற்கு, நகச் சூட்டில்தான் எண்ணெய்யின் சூடு இருக்க வேண்டும். அதாவது, உங்கள் நகத்தை வைத்து எண்ணெய்யை சோதித்தால் தாங்கிக்கொள்ளும் அளவிற்குதான், எண்ணெய்யின் சூடு இருக்க வேண்டும். மிகவும் சூடாகிவிட்டால் சற்று பொருத்து, சூடு குறைந்த பின்னர் அதிரசத்தை சுடுங்கள். நன்கு மெதுவடை போடுவதை போன்று தட்டி, அதிரசத்தை சுடலாம்.
அதிரசத்தை சுட்டு, சூடு போன பிறகு அதை நன்கு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். நீங்கள் சுட்ட அதிரசத்தை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். அதிரசம் மாவு தேவைக்கு அதிகமாக இருந்தால், நீங்கள் அதை கைப்படாமல், தண்ணீர் படாமல் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கலாம். அதை தேவைப்படும்போது எடுத்து குளிரை போக்கி அதிரசதம் சுடலாம். ஒரு மாதம் வரை நீங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மாவு ஒன்றும் ஆகாது.
தீபாவளிக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கிறது. இன்றே நீங்கள் அதிரசம் மாவை பிணைய தொடங்கினால், தீபாவளி அன்று காலை உங்கள் வீட்டாருக்கு சுட சுட அதிரசத்தை சாப்பிடக் கொடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ