)
Diwali holiday : தமிழ்நாட்டில் நாளை மறுநாள், அதாவது திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வெளியூர்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் திங்கட்கிழமைக்கு மறுநாள், செவ்வாய்க்கிழமை அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். முன்கூட்டியே இந்த அறிவிப்பு வந்தால் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அரசு பரிசீலித்த நிலையில், செவ்வாய்க்கிழமை சிறப்பு விடுமுறை அறிவித்தது. அதற்கு மாற்றாக 25 ஆம் தேதி வேலைநாளாகவும் அறிவித்தது.
தீபாவளி சிறப்பு விடுமுறை
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21.10.2025 அன்று விடுமுறை . இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21:10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கூட்டம்
இதனையொட்டி, சென்னை ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. முன்பதிவு இல்லா பெட்டிகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை பொதுமக்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து கிளம்பியதால் ரயில் நிலையங்கள் திக்குமுக்காடின. கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பரிதவித்தனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
கிளம்பாக்கத்தில் அமைச்சர் ஆய்வு
இதேபோல், சென்னை கிளாம்பாக்கத்திலும் மக்கள் கூட்டம் விடிய விடிய அலைமோதியது. அனைத்து ஊர்களுக்கும் பேருந்து வசதி அரசு சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்தும் ஆய்வு செய்ததுடன், அதுதொடர்பான புகார்கள் வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். செனை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களான சேலம், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ