தீபாவளி பலகாரங்கள்: தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆலோசனை!

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 14, 2025, 08:10 PM IST
  • கடைகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
  • உணவு பாதுகாப்பு துறை அனுமதி
  • உணவு பொருட்களை தயாரிக்க உத்தரவு மீறுபவர்கள் மீது நடவடிக்கை
தீபாவளி பலகாரங்கள்: தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆலோசனை!

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் பல்வேறு பலகாரங்கள் செய்து விற்பனை செய்யக்கூடிய கடைகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தரமான மற்றும் சுகாதாரமான உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ள பொருட்களை பயன்படுத்தி உணவு பொருட்களை தயாரிக்க உத்தரவு மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Add Zee News as a Preferred Source

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பண்டிகை கால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் அருண் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்வீட் கடை மற்றும் பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகள் உணவுப் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யும் கடைகளில் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு தயாரித்து வழங்கப்படும் ஸ்வீட் மற்றும் பல்வேறு விதமான உணவுப் பொருட்களை சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் மேலும் உணவு பாதுகாப்பு துறை தடை செய்து உள்ள செயற்கை நிறமிகளை கலக்காமலும் மேலும் முறையான தரமான எண்ணெய் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்து பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக உணவுப் பண்டங்களை தயார் செய்பவர்கள் அந்த இடத்திற்கு தேவையான உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பண்டங்கள் தயாரிக்கும் கடைகளில் சோதனை நடத்தப்படும் சோதனையில் உரிய முறையில் உணவு பாதுகாப்பு துறை அளித்துள்ள விதிகளை பின்பற்றாமல் தயாரிக்கப்படும் நிறுவனங்கள் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டு பின்னர் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Trending News