)
தேமுதிக சார்பில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செவிலிமேடு பகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திமுகவிற்கு 50 மார்க்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இரும்பு கரம் கொண்டு நிச்சயம் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, திமுக ஆட்சியில் நிறையும், குறையும் சமமாக உள்ளது அதனால் நூற்றுக்கு 50 மதிப்பெண் அளிப்பதாக அவர் பதில் அளித்தார்.மேலும், ஆணவக்கொலைக்கு முக்கிய காரணம் சாதிவெறி. இது ஆட்சியாளர்களின் விஷயம் அல்ல ஆணவ கொலை ஒட்டுமொத்த மக்களின் மனநிலை மாறினால் மட்டுமே தடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி நடை பயணத்தை முடித்துவிட்டு, திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது நல்லது இல்லை
அப்போது, தமிழகத்தில் மூன்று கட்டங்களாக 234 தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி நடை பயணம் நடைபெறும். தமிழகம் வந்தாரை வாழவைக்கும், யாரையும் வேண்டாம் என்று கூறவில்லை ஓட்டுரிமை என்பது அந்தந்த மாநிலத்தில் இருந்தால்தான் நல்லதாக இருக்கும் தமிழகத்தில் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது நல்லது இல்லை இதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. எங்கள் கட்சிக்கான வளர்ச்சிக்கு தான் தற்பொழுது நாங்கள் தற்பொழுது சென்று கொண்டிருக்கிறோம்.
வரும் ஜனவரியில் 9 தேதி மாநாடு கடலூரில் நடைபெற உள்ளது. இதனை எங்கள் கட்சியின் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிப்போம்.
ஆளுங்கட்சியில் நிறைகளும் இருக்கிறது குறைகளும் இருக்கிறது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. கஞ்சா போதை விற்பனை, ஆணவக் கொலை, விலைவாசி உயர்வு, இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிகளையும் சிலது நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த ஆட்சி நிறைகளையும் குறைகளையும் கலந்ததாக தான் தேமுதிக பார்க்கிறது என தெரிவித்தார்.
ஆவணக்கொலைக்கு தனிச்சட்டம்
தொடர்ந்து, உங்கள் பிரச்சார கும்மிடிப்பூண்டி நடைபயணத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது குறித்து கேள்விக்கு, இதுபோல் சம்பவங்கள் எங்களுக்கு புதிதல்ல கேப்டன் உடன் பயணத்தை நாங்கள் இதுபோல் கட்சி ஆரம்பித்து பல சவால்களை சந்தித்துள்ளோம். இந்தியவிலுள்ள அனைவருக்கும் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கிறது இதனை தடை செய்வதற்கு யாருக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு வாக்குச்சாவடிகளை இல்லை என்று கூறுவது கூறுவதற்கு ஜனநாயகம் நிராகரிப்பது ஜனநாயகத்திற்கு ஒரு கேள்விக்குறியாகும் இது மிக மிக கண்டிக்கக் கூடிய ஒரு விஷயம்.
இன்று நாம் ஆட்சியில் இருக்கின்றோம் என்று ஆடினால் மாற்றம் ஒன்றே தீர்வு என்று கடவுள் அமைத்துக் கொடுத்து விடுவார் இங்கு பிறந்த அனைவர்களுக்கும் ஓட்டுரிமை இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் நீதியரசர்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு வாக்குரிமை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதற்கு தேமுதிக துணை நிற்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ