விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!

DMDK Premalatha Vijayakanth: 2026ல் கூட்டணி ஆட்சி வந்தால்தான் தப்பை சுட்டிக்காட்ட முடியும் என்றும், தவெக உடனான கூட்டணி குறித்தும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 9, 2025, 03:18 PM IST
  • விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா?
  • பிரேமலதா விஜயகாந்த் பதில்
விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!

கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் விடுதியில் தங்கினார். இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

Add Zee News as a Preferred Source

அப்போது பேசிய அவர், தனியாக நிற்பதை உருவாக்கியது கேப்டன் தான். இதுவரை எந்த கட்சியும் தனித்து நிற்கவில்லை. தற்போது சீமான் தனித்து நிற்கிறார். விஜய் அவருடைய நிலைப்பாட்டை இன்னும் கூறவில்லை.  இனி தேமுதிக தனித்து நிற்பது காலம் தான் முடிவு செய்யும். 2026 தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று மிகப் பெரிய பலத்தோடு சட்டசபைக்கு செல்வது எங்களுடைய எண்ணம்.

தேமுதிக வாக்கு சதவீதம் குறைந்து வருகிறதா என்ற கேள்விக்கு, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதை தற்போது நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது.40 தொகுதிகளிலும் நின்றதற்கும், 4 தொகுதியில் நின்றதையும் ஒப்பிடக்கூடாது. ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் நாங்கள் நிகராக தான் உள்ளோம். எங்கள் வாக்கும் நிகராக தான் உள்ளது.234 தொகுதிகளுக்கும் மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் உடன் இணைந்து 4 நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார். 

தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியுடன்  கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு, அதற்கு அவர்தான் சொல்ல வேண்டும் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடம் ஆகிறது. அரசியல் ஆதாயம் என்பது தேர்தல் நோக்கி தான் நகர்கிறது.  எங்களுடைய நகர்வும் இனிய அரசியலை நோக்கி தேர்தல் கண்ணோட்டத்தில் இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026ல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நல்லதுதான்.  அப்போதுதான் தப்பு நடந்தால் அதனை சுட்டிக்காட்ட முடியும். கரூர் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை, 24 மணி நேரமும் மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரழிந்து உள்ளது என கூறினார். 

மேலும் படிங்க: தமிழ்நாட்டில் எங்குமே பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை.. இதுதான் திமுக அரசின் சாதனையா? - அன்புமணி ராமதாஸ்

மேலும் படிங்க: தவெக -வில் இணைந்த IRS அதிகாரி, அதிமுக, திமுக MLA -க்கள் பட்டியல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News