அதிமுக கவுன்சிலரை ஓங்கி அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலரை திமுக பெண் கவுன்சிலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : May 29, 2025, 04:21 PM IST
  • சேலம் மாநகராட்சி கூட்டத்தில் களோபரம்
  • அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்
அதிமுக கவுன்சிலரை ஓங்கி அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலத்தில் நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (மே 29) மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தனர். கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உட்பட பல்வேறு கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

Add Zee News as a Preferred Source

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை  முன்வைத்தனர். அப்போது அதிமுக மாமன்ற குழு தலைவரும் கவுன்சிலருமான யாதவ மூர்த்தி பேசினார். எனது வார்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக டெண்டர்கள் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார். 

இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாத ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறின. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த நிலையில் தான், அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தியை திமுக பெண் கவுன்சிலர் சுஹாசினி கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை சிலர் தடுக்க முற்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து சண்டையிட்டுள்ளனர். 

மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். திமுக கவுன்சிலரின் நடவடிக்கையை கண்டித்து அதிமுகவை சேர்ந்தவர்கள் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை. ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது. நாங்கள் ஆதாரங்களுடன் பேசி வருகிறோம். 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என யாதவ மூர்த்தி கூறினார்.

மேலும் படிங்க: தமிழ்நாடு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள், பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ்

மேலும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி வைக்குமாறு அன்புமணி, சவுமியா அன்புமணி கெஞ்சினர் - ராமதாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News