நாளை மறுநாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணமானது ராமேஸ்வரத்தில் இருந்து துவங்க இருக்கிறது, இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கிறார். முன்னதாக அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் 1 என்ற திமுக முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு இருந்தார். அப்பொழுதே டிஎம்கே பைல்ஸ் 2 வெளிவரும் அதில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த நிர்வாகிகளின் சொத்து மதிப்புகள் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட வற்றை தனது நடை பயணத்துக்கு முன்னதாக வெளியிடுவேன் என கூறியிருந்தார்.  அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக ஆளுநரை சந்தித்து டிஎம்கே பைல்ஸ் இரண்டின் ஆவணங்களை அவர் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொகுதி வாரியாக நடத்த திட்டமிட்டு இருக்கும் அண்ணாமலை, இந்த நடைபயணத்தை துவங்கி வைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் - நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்


மேலும், சமீபத்தில் பேசிய அண்ணாமலை காமராஜரின் கனவை பாரத பிரதமர் ஜல் ஜீவன் என்னும் திட்டத்தின் மூலம் நனவாக்கி இருக்கிறார். இந்தியா முழுவதும் அவர் கனவை நனவாக்கி வருகிறார். ஜிஎஸ்டி வந்த பிறகு இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது, தமிழகம் முன்னேறவில்லை என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி இல்லை இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் தான் 20, 30% கமிஷன் கேட்டால் எப்படி இங்கு தொழில்துறைகள் உள்ளே நுழையும்! அதனால் இவர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டுமே தவிர எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறை கூறக்கூடாது.  இந்த ஒன்பது ஆண்டுகள் தான் இந்தியாவிலேயே குறைவாக பணவீக்கம் இருக்கின்ற ஆண்டு, விவசாய உற்பத்தி குறைவு தான் பண வைக்கதற்கான காரணம்


பிரதமர் சொன்னதாக கூறுகின்ற செய்திகளை உண்மை என்று ஆதாரத்தோடு நிரூபித்தால் ஒரு கோடி என்ன ஆயிரம் கோடி கிடைக்கும். கருப்பு பணத்தை பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது தமிழக முதலமைச்சருக்கும் தகுதி இல்லை... செந்தில் பாலாஜி மொரிஷிசியஸில் பதுக்கி வைத்திருக்கிற பணத்தை  அமலாக துறையையும் போலீசையும், நீதிபதகயையும் வேலை செய்ய விட்டால் அவர்கள் பதுக்கி வைத்திருக்கிற எல்லா பணத்தையும் எடுக்க முடியும்.   திமுக காரர்களுக்கு பெரும்பாலானோருக்கு ஆங்கிலமே தெரியாது. தமிழும் அரைகுறை.. இந்தியும் சுத்தமாகத் தெரியாது அதனால் தான் ஒன்றுமே தெரியவில்லை. படத்தில் நடிப்பதை போன்று பத்திரிக்கையாளர் கேட்க கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டு பதில் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின், மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கொஞ்சமாவது அவர்களை கேபினட்டில் இருப்பவர்களை ஆங்கிலமும், இந்தியும் தெரிந்தவர்களை வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் என்ன பேசினார் என்று இவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதனால் தான் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


20000 கோடி ஊழல் செய்தவருக்கு முக்கிய பொறுப்பு பாஜகவில் வழங்கப்பட்ட வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, நீங்கள் சொல்லக்கூடிய மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி இல்லை அங்கு எக்நாத் ஷின்டே தான் முதலமைச்சர், மகாராஷ்டிரா முதலமைச்சர் சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து வந்தவருக்கு அந்தத் துறை  பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது தவிர நீங்கள் சொல்லுகிற குற்றச்சாட்டு என் சி பி ல் இருந்து வருகிறவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற துறைகளுக்கு பிஜேபி பொறுப்பாகாது, அதன் பின்னால் செல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை, யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.


மல்யுத்த வீரர்கள் போராட்டத்தைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசுக்கு எதிராக போராடிய அனைவரும் இந்தியாவிற்கு வெளியே பயிற்சியில் இருக்கிறார்கள். சாக்ஷி மாலிக் தொடங்கி போராட்டக் களத்தில் இருந்த அனைவரும் மத்திய அரசின் நிதியில் வெளியில் பயிற்சியில் இருக்கிறார், அவர்களுக்கு எந்தவிதமான தடையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. பிடிச்சிபூஷன் மீது சாற்றப்பட்டு இருக்கிற குற்றத்தை குற்றம் சாட்டிய 18 வயதிற்கு கீழ் இருக்கிற பெண்ணினுடைய தந்தையை மறுத்திருக்கிறார் தான் ஆத்திரத்தில் அந்த குற்றச்சாட்டை பதிவு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார், குற்றச்சாட்டிற்காக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றால் இந்தியாவில் பாதி பேர் இந்தியாவை விட்டு வெளியே தான் இருக்க வேண்டும் என்றார்.


மேலும் படிக்க | வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ