)
Sanitation Workers Development Scheme: கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக செய்யப்பட்டனர். இதற்கு பல கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழாக் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னையில் சில குறிப்பிட்ட மண்டலங்களில் குப்பைகள் சேகரிக்கும் பணி என்பது தனியார் வசம் இருக்கிறது. இதனையடுத்து மேலும் சில மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்படைக்கலாம் என சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கையை சென்னை மாநகராட்சி ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு துப்புரவு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்தை நடைபெற்றது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஆகஸ்டு 31 ஆம் தேதிக்கு
பணியில் சேர வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டது. எதற்கும் செவி சாய்க்காமல் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
துப்புரவு பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" என உத்தரவிட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியை அடுத்து, தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக இலவச காலை சிற்றுண்டி, மருத்துவ சிகிச்சை, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
— M.K.Stalin (@mkstalin) August 14, 2025
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான… pic.twitter.com/PEpSAiqZzq
தனது சமூக வலைத்தளத்தில், "நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
- தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
- தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
- தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
- தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
- தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
- பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
- தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!
இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு! #DMKGovtStandsWithSanitaryWorkers" என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ