கோயிலை இவர்கள்தான் பயன்படுத்துவார்கள்... முருகப் பக்தர்கள் மாநாட்டை விமர்சித்த கனிமொழி!

Tamil Nadu News: போர் என்பதோ, தீவிரவாதம் என்பதோ நிச்சயமாக ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது என கனிமொழி பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 15, 2025, 04:32 PM IST
கோயிலை இவர்கள்தான் பயன்படுத்துவார்கள்... முருகப் பக்தர்கள் மாநாட்டை விமர்சித்த கனிமொழி!

Tamil Nadu News Latest Updates: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று (ஜூன் 15) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tamil Nadu News: வெளிநாடுகளுக்கு சென்ற எம்.பி., குழு

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, "இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஏழு குழுக்கள் 30க்கும் மேற்படட் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்க இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கை துறையை சார்ந்தவர்கள் உள்ளிட்டோரை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டையும், நமக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகலளையும், பாகிஸ்தானில் இருந்து தொடர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு  ஆளாக்கப்பட்டு பாதிக்கப்படக்கூடிய இந்திய நாட்டின் மக்கள் அவர்களுடைய நிலை இவற்றையெல்லாம் கூறுவதற்காக அனுப்பப்பட்டு இருந்தோம்.

ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு உள்ளவர்களை சந்திக்கும் போது அரசைத் தொடர்ந்து விமர்சிக்க கூடிய உறுப்பினர் தலைமையில் அடங்கிய ஒரு குழு அதுவும் பெரும்பாலும் எதிர்க்கட்சியை உறுப்பினர்கள் இருக்கக்கூடிய ஒரு குழு தங்கள் நாட்டிற்கு இந்திய நாட்டின் நிலைப்பாட்டை பற்றி எடுத்துச் சொல்வதற்கு, இந்தியாவை நிலைப்பாட்டை உணர்ந்து கொள்ளக்கூடிய ஒரு குழுவாக அந்த குழு அமைந்திருந்தது.

Tamil Nadu News: தீவிரவாதம் ஆரோக்கியமானது இல்லை

பல இடங்களிலே அவர்களுக்கு இருக்கக்கூடிய சில சந்தேகங்கள் அவற்றை தீர்த்து வைப்பதற்கும், அதே நேரத்தில் இந்தியாவிற்கும் அவர்களுக்கும் இருக்கக்கூடிய உறவை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பாகவும் இது அமைந்தது. பல நாடுகளுக்கு இடையே இன்று உலகம் முழுவதுமே பல பல பிரச்சனைகளை, போருக்கான ஒரு நிலவரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

நிச்சயமாக இவை இன்னும் அதிகமாகாமல் உலக நாடுகள் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும், சரி செய்ய வேண்டும். போர் என்பதோ, தீவிரவாதம் என்பதோ நிச்சயமாக ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது, அது நிரந்தர தீர்வாகவும் இருக்க முடியாது" என்றார்.

Tamil Nadu News: திருச்செந்தூர் கும்பாபிஷேகம் குறித்து...

மேலும், "என்னங்க திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது என்பது எனக்கு தெரியும். அது எப்படி நடத்தப்படுவது என்பது அறநிலைத்துறை கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் முடிவு செய்வார்கள். அரசியல்வாதிகள் அது பற்றி முடிவு செய்யக்கூடாது 

தமிழில் நடத்தக்கூடாது என்று யாருடைய கருத்தும் இருக்க முடியாது. அதுவும் தமிழ் கடவுள் என்று கொண்டாடப்படக்கூடிய முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் அப்படிங்கறது வந்து சொன்னாலும், சொல்லாவிட்டாலும் அது தமிழுக்கான ஒன்றாக தான் இருக்கும்.

யார் வந்து வலிமையாக இல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மதத்தை பயன்படுத்தி ஏதாவது ஒரு இடத்தை கண்டுபிடித்து விட முடியுமா என்று தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதை பல பேர் ஈடுபடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடையாளங்களை காண்பதற்காக அவர்கள் கோயில்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள், மதத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என முருகப் பக்தர் மாநாட்டை விமர்சித்தார். 

மேலும் படிக்க | தந்தையர் தினத்தில்... ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி - உருக்கமாக பேச்சு!

மேலும் படிக்க | வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்? வெளியான முக்கிய தகவல்!

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய இலவச அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News