தமிழகத்தின் மூத்த அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான கே.என். நேரு, தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை அளித்துள்ளது, சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியின் அமைச்சர், உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | குரூப்-4 தேர்வு எழுதுபவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் சொன்ன குட் நியூஸ்!
This was spotted by a friend of mine at Tirumala today. pic.twitter.com/0dceMOSrdf
— Ramakrishnan T (@Rama_Krishnan) November 9, 2025
பிறந்தநாள் பரிசாக அன்னதானம்
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னப்பிரசாதம் அறக்கட்டளை மூலம் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த அன்னதான சேவைக்கான ஒரு நாள் முழு செலவான ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தனது பிறந்த தினமான நவம்பர் 9-ம் தேதியன்று, இந்த ஒரு நாள் அன்னதானத்திற்கான முழு செலவையும் அமைச்சர் கே.என். நேரு ஏற்றுக்கொண்டு, அதற்கான தொகையை தேவஸ்தானத்திடம் வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து, திருப்பதியில் உள்ள அன்னதான கூடத்தின் டிஜிட்டல் பலகைகளில், 'இன்றைய உபயதாரர் கே.என். நேரு' என்ற அறிவிப்பு இடம்பெற்றது.
கிளம்பிய விமர்சனங்கள்
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கின. "தந்தை பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுகவினர், இப்படி உலகின் பணக்கார கோயிலுக்கு பல லட்சங்களை அள்ளி கொடுப்பது எந்த வகையில் சரி?" என்று பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், "திமுக தலைவர்களான முதல்வரும், துணை முதல்வரும் சனாதனத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்; இந்து பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. ஆனால், கட்சியின் மூத்த அமைச்சரே இப்படி செய்வது கொள்கை முரண்பாடு இல்லையா?" என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர். "இந்த பணத்தை ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களுக்கு அளித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்," என்ற கருத்தும் பரவலாகப் பகிரப்பட்டது.
திராவிட மாடல் குறித்த கேள்வி
"மேடைகளில் மட்டும் பெரியாரின் கொள்கைகளை பேசிவிட்டு, தனிப்பட்ட வாழ்வில் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வது தான் திராவிட மாடலா?" என்ற கேள்வியையும் சில இணையவாசிகள் எழுப்பினர். திமுகவின் அடிப்படை கொள்கைக்கும், அதன் தலைவர்களின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இது காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் திமுக ஆதரவாளர்கள், "திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல; மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் சக்திகளுக்கு மட்டுமே எதிரானது," என்று வாதிடுகின்றனர். "கட்சியின் உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்றுவது அவர்களின் தனிப்பட்ட உரிமை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் எவ்வளவு பக்தியுள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இதில் கொள்கை முரண்பாடு ஏதும் இல்லை," என்றும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மட்டுமே திமுக போராடுகிறது, தனிநபர் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதில்லை என்பதே அவர்களின் வாதமாக உள்ளது.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதியவர்களுக்கு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









