DMK MLA Maharajan: இலவச பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஓசி பயணம் என்று திமுக ஏம்எல்ஏ மகாராஜன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Free Buses Controversy: கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபின் பல திட்டங்களை பெண்களுக்காக அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று தான் விடியல் பயண திட்டம். இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயணடைந்து வருகின்றனர். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் போக்குவரத்துக்கு என ஒதுக்கப்படும் பணம் மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் அவர்கள் பயணும் அடைகின்றனர்.
இந்த நிலையில், விடியல் பயண திட்டம் தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற எம்எல்ஏ-வாக இருக்கும் திமுகவை சேர்ந்த மகாராஜன் பேசி இருப்பதுதான் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டியில் பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜன், நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது.இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.
மேலும் மகளிர் விடியல் பயணதிட்டத்தில்,நான் முன்னரே கூறியது போல் பெண்கள் அனைவரும் அரசு பஸ்ஸில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம்.அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள்.உங்கள் ஊருக்கு பஸ் விட்ட பின்,எங்கள் ஊருக்கு ஏரோபிளேன் வேணும் என்றும் ரயில் வேணும் என்றும் கேட்டு விடாதீர்கள் என்றார்.
ஏற்கனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.அதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ்ஸில் செல்லுங்கள், உங்கள் ஊருக்கு ஓசி பஸ் விட போகிறோம் என்று பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவை சேர்ந்த அண்ணாமலை, இந்த ஆணவமும் திமிரும் எங்கிருந்து வருகிறது என சரமாரியாக பேசி உள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் என கூறி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ