குன்னூரில் இருந்த 20 ஆண்டு கால பிரச்சனையை தீர்த்து வைத்த ஆ. ராசா!

குன்னூர் அருகில் தமிழக அரசு ரூ.1.20 கோடி செலவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான பணிகள் துவங்கி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2025, 11:05 AM IST
  • சாலை இல்லாமல் சிரமப்பட்ட மக்கள்.
  • 20 ஆண்டுகளாக நீடித்த பிரச்சனை!
  • ஆ. ராசா சாலை பணிகளை துவக்கி வைத்தார்.
குன்னூரில் இருந்த 20 ஆண்டு கால பிரச்சனையை தீர்த்து வைத்த ஆ. ராசா!

குன்னூர் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு சாலை பணிகளை துவக்கி வைத்த அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், எம்.பி ராசா. மேலும் அடிப்படை தேவையான புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் கிராமத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியினர் அன்றாட அலுவல், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல 3 கி.மீ., தூரமுள்ள வண்டிச்சோலை பகுதிக்கு சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக கோடமலை எஸ்டேட் - வண்டிச்சோலை வரையுள்ள பாதை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சாலை அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | இன்ஜினியரிங் கவுன்சிலிங் : தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் - விண்ணபிக்க நாளை கடைசி நாள்

கரடுமுரடான அந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகளும் தயங்கியதால், அவசர காலங்களில் கர்ப்பிணிகள், நோயாளிகளை தொட்டில் கட்டி செங்குத்தான நடைபாதை வழியாக தூக்கி செல்ல வேண்டிய அவலம் காணப்பட்டது. மேலும் இவ்வாறு தூக்கி செல்லும் நோயாளிகளும் பாதி வழியில் உயிரிழந்து வரும் சம்பவங்களும் இருந்து வந்தது. 'வனத்துறைக்கு உட்பட்ட பாதையில் சாலை அமைத்து, வாகனம் சென்று வரும் அளவுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்' என, கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள மக்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனிடையே தமிழக அரசு ரூ.1.20 கோடி செலவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. 

அதன் ஒரு பகுதியில் முதற்கட்டமாக 21 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பணிகள் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று ரூ.99 லட்சம் செலவில் இரண்டாம் கட்ட சாலை பணிகள் துவங்கியது. இதில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன், திமுக மாவட்ட பொருப்பாளர் கே.எம்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு, சாலை பணியை பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தனர். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் சாலை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். 

தனை தொடர்ந்து அப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான சமுதாய கூடம் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டி முடிக்கப்பட்ட நிலையில், இதனை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார், கிராம தலைவர் ராஜகுலேந்திரன் உட்பட கமிட்டியாளர்கள் மற்றும் கிராம இளைஞர்கள், கிராம மக்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | இனி அலையவே வேண்டாம்... உங்களை தேடி வரும் தமிழக அரசு திட்டங்கள் - மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News