வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிடக்கூறி திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டுள்ளார்.
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடக்கோரி திமுக சார்பில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவசர வழக்காக விசாரிக்க முடியாது. வரும் டிசம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளபப்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை, ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 56 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு என மொத்தம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது