வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - திமுக vs பாஜக விவாதம் இதோ!

TN Assembly News: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 27, 2025, 02:37 PM IST
  • பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு
  • எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
  • பாஜக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் - திமுக vs பாஜக விவாதம் இதோ!

TN Assembly News: வக்பு சட்டத்திருத்த சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்தார்.

Add Zee News as a Preferred Source

TN Assembly News: சட்டப்பேரவையில் நடந்த காரசார விவாதம்

இந்நிலையில், வக்பு சட்டத்திருத்த சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தீர்மானத்தில் திமுக - பாஜக இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது. அவையில் நடந்த காராசர விவாதம் இதோ:

பாஜக வானதி சீனிவாசன்: வக்பு வாரியத்தின் சீர் செய்ய வேண்டும், பெண்களையும் வக்பு வாரியத்தில் வரவேண்டும் என்ற நோக்கில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைச்சர் ரகுபதி: ஒரு மதத்தின் அடையாளம் உள்ள வாரியத்தில் வேறு ஒரு மதத்தில் உள்ளவரை நுழைப்பது எந்த விதத்தில் நியாயம். மத உரிமையில் குறுக்கிடுவது போல் ஆகும். வக்பு வாரியம் எடுக்கும் முடிவு இறுதியாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் முடிவு எடுக்க வேண்டும் என கூறுவது அரசு நுழைவது போல் இருக்கும். சட்டத்தை நீர்த்து போகும் அளவிற்கு சட்டத்திருத்தம் வந்துள்ளது. வக்பு சொத்தை அபகரிக்கும் சூழல் உள்ளது. மத ரீதியாக பாதிப்படைய செய்தவர்களை பொருளாதார ரீதியாக பாதிப்படைய செய்கிறது.

வானதி சீனிவாசன்: வக்பு முறைகேடுகள் பல்வேறு மாநிலங்களில் வந்ததையடுத்து மத்திய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது. இது குறித்து பேச நேரம் கொஞ்சம் அதிகமாக தர வேண்டும். நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடி நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து கருத்துகளை கேட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரகுபதி: நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, ஆட்சபனை கருத்துகளை ஏதும் பரிந்துரையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

முதல்வர் ஸ்டாலின்: நாடாளுமன்ற  கூட்டு நடவடிக்கை குழுவில் ஆட்சபனை கருத்துகள் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் சட்டசபையில் வானதி சீனிவாசனுக்கு அவை தலைவர் முழுமையாக அனுமதி தர வேண்டும். 

வானதி சீனிவாசன்: மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானத்தில் பேச திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி உள்ளது.

ஸ்டாலின்: எங்கள் பிரதிநிதிகளை பேச அனுமதிக்கவில்லை

வானதி: மாநில சட்டப்பேரவை இருக்கும் அதிகாரம் தான் மத்திய அரசுக்கு பொருந்தும் வக்பு சட்டத் திருத்த சட்டமுன்வடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கின்றோம்.

ஜவாஹிருல்லா: அரசியல் சட்டத்திற்க்கு உட்பட்டு தான் மசோதா கொண்டுவந்ததாக வானதி சீனிவாசன் கூறினார்கள். ஆனால் அரசியல் சட்டத்திற்கு விரோதாமாக கொண்டுவரப்பட்டுள்ளது 

ஆளுர் ஷானவாஸ்: இஸ்லாமிய பெண்களை வாரியத்தில் கொண்டுவர மசோதா கொண்டுவந்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஏற்கனவே வக்பு வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் பணியாற்றியுள்ளார்கள். வக்பு வாரியத்தை முறைபடுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் அதிகரிக்க வேண்டும்.

பூவை ஜகன் மூர்த்தி: இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டத் திருத்தம் எதிராக இருப்பதால் இதன் எதிர்க்கிறேன். முதலமைச்சருக்கு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் 

வேல்முருகன்: இஸ்லாமியர்களுக்கு இந்தச் சட்டம் எதிராக இருக்கின்றனர். அவர்களை   இந்த நாட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்கின்றனர். அவர்களின் சொத்துக்கள் பறிபோகம் சூழ்நிலை இருப்பதால் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரிக்கிறோம்

TN Assembly News: தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு ஏன்? 

அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி: ஒன்றிய அரசின் இந்த திருத்தம் வக்பு வாரிய சட்டத்தின் அடிப்படையை தகர்ப்பதாக உள்ளது.
புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் தானமாக வழங்கிய நோக்கமே சிதைந்துவிடும். கருத்து கேட்பு நடத்தும் போது அதிமுகவை அழைக்கவில்லை. இஸ்லாமிய மக்களின் அச்சம் நியாமானது. தமிழ்நாடு முதல்வரின் தீர்மானத்தை ஆதரிக்கிறோம்" என்றார்.

TN Assembly News: எடப்பாடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் 

இதையடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"பாஜக தவிர அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளார்கள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வரவேற்றுள்ளது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லிக்கு சென்றபோது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரு மொழிக் கொள்கை குறித்து பேச வேண்டும் என தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் அங்கு சென்றபோது யாரையும் சந்திக்க வரவில்லை எனக் கூறிவிட்டு, மாலையில் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.

சந்திக்க வேண்டாம் எனக் கூறவில்லை. பின்னர் செய்தியாளர்களை சென்னையில் சந்திக்கும்போது இரு மொழிக் கொள்கை குறித்து பேசினேன் என்று கூறினார். அதற்கு நன்றி. அதே போல் இத்தீர்மானம் குறித்தும் அடுத்த முறை டெல்லிக்கு செல்லும் போது அவர் பேசவேண்டும்" என்றார்.

TN Assembly News: தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

இதையடுத்து, பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவை அடுத்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. "இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. 

ஆனால், அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995ஆம் ஆண்டின் வக்பு சட்டத்தினை திருத்துவதற்கு கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு திருத்தச் சட்டத்தை (The Waqf (Amendment) Bill, 2024) திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது" என அறிவிக்கப்பட்டது 

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி...! எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்... என்ன காரணம்?

மேலும் படிக்க | தவெக OUT - பாஜக IN.. மாஸ்டர் பிளான் போட்ட இபிஎஸ்... முழுப் பின்னணி

மேலும் படிக்க | சென்னையில் நடந்த என்கவுன்டர்.! அதிகாலையில் கேட்ட Bullet Sound! ஷாக்கிங் பின்னணி !
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News