இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் அமைந்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருட்சிலைக்கு மதிமுக சார்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து துரைவைகோ எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு முன் எதுவும் கூற முடியாது. அது சட்டத்திற்கு புறம்பானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னால் தான் எதையும் கூற முடியும்.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஜாதி வன்மம் இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார் அந்தக் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு
கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். இதுபோன்று பல சம்பவங்கள் உயிரிழப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் கடமை இருக்கிறது.
காவல்துறை சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை தான் இருக்கிறது. மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது’ என்று கூறினார்.
மேலும் படிக்க | விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் - சத்குரு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









