இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிகமான திட்டங்களை வகுத்துள்ள மாநிலம் தமிழகம் தான். பெண்களின் உரிமைக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்ற திட்டங்களில் ஒன்று. அண்டை மாநிலங்கள் கூட தமிழகத்தை பார்த்து இதைப் போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சமூக நலன் மற்றும் மக்கள் உரிமை துறை மூலமாக தமிழக அரசு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெண் சிசுக்கொலையை தடுக்கவு,ம் பெண்களுக்கு கல்வி தகுதியை அதிகரிக்கவும் இந்த திட்டம் முதன்மையாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்ற குடும்பத்திற்கு ரூபாய் 50,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது, இதனை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.
உங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த திட்டத்தில் ரூபாய் 50,000 உதவித்தொகையை பெற முடியும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கு தல ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தால் இந்த திட்டத்தில் உங்களால் பயன்பெற முடியாது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அந்த மூன்று குழந்தைகளுக்கும் உதவித் தொகை கிடைக்கும். மூன்று குழந்தைக்கும் ரூ. 25,000 வீதம் மொத்தமாக ரூ. 75,000 கிடைக்கும்.
ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு குழந்தையின் பெயரில் ரூபாய் ஐம்பதாயிரம் டெபாசிட் செய்யப்பட்டு அதற்கான சேமிப்பு பத்திரம் வழங்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இந்த சேமிப்பு பத்திரம் புதுப்பித்து வழங்கப்படும். இது தவிர குழந்தையின் பள்ளி செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத்தொகையும் குழந்தையின் பெயரில் வழங்கப்படும். பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது மொத்த தொகையும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72,000க்கு குறைவாக இருக்க வேண்டும். அதே போல கணவன் அல்லது மனைவியின் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதலாக இருப்பிட சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் போன்றவற்றை இதனுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதே போல பெற்றோர்களின் வயது சான்றிதழும் இந்த திட்டத்திற்கு முக்கியம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ சேவை மையங்களில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ