DMK Budget 2025 | 936 இடங்கள்.. தமிழக பட்ஜெட் தாக்கல் எங்கெல்லாம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது!

Tamil Nadu Budget 2025 Live Broadcast: தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரலை செய்யப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 14, 2025, 08:02 AM IST
DMK Budget 2025 | 936 இடங்கள்.. தமிழக பட்ஜெட் தாக்கல் எங்கெல்லாம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது!

Tamil Nadu Budget 2025 Latest News: தமிழக பட்ஜெட்டை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே வாருங்கள் பட்ஜெட் நேரலை எங்கெல்லாம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதைக் குறித்து பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

தமிழ்நாடு சட்டப்பெறவையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பெறவைத் தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். எனவே மக்களைக் கவரும் பல்வேறு அம்சங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய பட்ஜெட் தாக்கல் தமிழ்நாடு முழுவதும் 936 இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் குறித்து உடனுக்குடன் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் ஒளிபரப்பப்படுகிறது.

அதாவது தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் டவர், கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை, கத்திப்பாரா, பாண்டி பஜாா் சாலை, டைடல் பாா்க் சந்திப்பு, பெசன்ட் நகா், திருவான்மியூா் உட்பட 100 இடங்களில் ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு பேரவை கூட்டத்தொடரின் நாட்களை இறுதி செய்வதற்கான அலுவல ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க - LIVE தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று... கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பென்சன், புதிய அறிவிப்புகள் லேட்டஸ்ட் அப்டேட்

மேலும் படிக்க - தமிழ்நாடு பட்ஜெட்: பெண்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை - எதிர்பார்ப்புகள், கணிப்புகள் என்ன?

மேலும் படிக்க - TN Budget 2025 | மார்ச் 14.. தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல்.. வரப்போகும் மாற்றங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News