Chennai: சிறுநீரகம் அகற்றுதல், தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை ஒரே நேரத்தில் செய்த மருத்துவர்கள்
சென்னை மருத்துவர்கள் தொடர்ந்து ஆறு மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் நோயாளி ஒருவரைக் காப்பாற்றினார்கள்... சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சையையும்,, தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செய்தனர்.
சென்னை: புற்றுநோய் நோயாளி ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சையையும்,, தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையையும் ஒரே நேரத்தில் செய்தனர்.
சென்னை மருத்துவர்கள் தொடர்ந்து ஆறு மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயாளியை காப்பாற்றினார்கள். நோயாளியின் தொடை எலும்பு மாற்று (thigh bone replacement) மற்றும் இடப்புறமுள்ள சிறுநீரகத்தை ஒரே நேரத்தில் அகற்றினர்.
வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த 54 வயது பெண்மணி மூன்று மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்தார், எலும்பு முறிவு மற்றும் இடது தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பெண்ணுக்கு சிக்கல் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் (Apollo Proton Cancer Center) அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு மெட்டாஸ்டேடிக் இடது சிறுநீரக செல் புற்றுநோயைக் (metastatic left renal cell carcinoma) கண்டறிந்தனர். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று கட்டிகளை ஏற்படுத்துகின்றன.
Also Read | கோவிட் இரண்டாம் அலைக்கு 798 மருத்துவர்கள் பலி
மருத்துவர்கள் முழங்கால் மூட்டில் உள்ள கட்டியை அகற்றி, அதற்கு பதிலாக ஒரு மெகா புரோஸ்டீசிஸ் (mega prosthesis) வைத்து மாற்றினார்கள். அதே சமயத்தில் அடிவயிற்றில் மூன்று 5 மிமீ துளைகள் போட்டு லேபராஸ்கோபிக் மூலமாக இடது சிறுநீரகத்தை அகற்றினர்கள். இரண்டு சிகிச்சைகளையும் ஒரே நேரத்தில் நடத்தி புற்றுநோய் நோயாளிக்கு செய்தனர்.
கோவிட் -19 பயம் காரணமாக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தேவையற்ற தாமதம் புற்றுநோயை மேலும் தீவிரப்படுத்திவிடும் என்று அப்போலோ மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி, தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையையும் செய்வது செலவை குறைக்கும் என்று அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவர் திருமதி. ப்ரீதா ரெட்டி கூறுகிறார். அதோடு, மருத்துவமனையில் குறைந்த காலம் இருந்தால் போதும் என்றும் அவர் கூறுகிறார்.
Also Read | இந்தியாவில் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லாவுக்கு அனுமதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR