)
Vinayagar Chaturthi 2025: வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி பரவலாக கொண்டாடப்படும். பெரியளவில் தற்காலிகமாக விநாயகர் சிலையை வழிபாட்டிற்கு நிறுவி, அதை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இருப்பினும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சுற்றுச்சூழலை பாதிக்காத அளவில், மிகவும் பாதுகாப்பாக நடப்பதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) ஒவ்வொரு ஆண்டும் வழங்கும். அந்த வகையில், 2025ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை ஆகியவை குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
- பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (POP) விநாயகர் சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது.
- சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு
விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்தக் கூடாது.
- சிலைகளின் மேல் பூசிற்கும், அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற இரசாயனங்கள் அல்லது எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.
- சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிககும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருள்களை பூஜை பொருள்களாக பயன்படுத்தக்கூடாது.
- வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசயானங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கி எறியக்கூடிய அலங்கார பொருள்களை பயன்படுத்த கூடாது.
- விநாயகர் சதுர்த்தியின்போது, பிராசத விநியோகத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
- குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.
- அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.
- ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது.
- ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
- சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டும்.
- அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்க கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
- பிராசத விநியோகத்திற்கு மக்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
- பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.
- எல்.இ.டி பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.
- அலங்கார பொருள்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்த வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ