Sivakasi Teacher Attacked: சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில், மது போதையில் இருந்த மாணவர்கள் சேர்ந்து ஆசிரியர் சுந்தர மூர்த்தியை மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sivakasi Teacher Attacked: 2 மாணவர்கள் கைது
ஆசிரியர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நான்கு மாணவர்களை பிடித்து செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மது போதையில் வந்த மாணவர்களை தட்டி கேட்டு தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வதாக கூறிய பொது, அறிவியல் பிரிவு ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. காயமடைந்த ஆசிரியர் சுந்தர மூர்த்தி மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Sivakasi Teacher Attacked: சமூக ஆர்வலர்கள் கேள்வி
சிவகாசியில் மாணவர்கள் மதுபோதையில் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் தொடுத்தது அரசியல் ரீதியாகவும் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக ஆளும் திமுக அரசு மீது கடும் விமர்னங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
Sivakasi Teacher Attacked: பள்ளிக்கல்வித்துறையை நோக்கி அண்ணாமலை கேள்வி
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது X பக்கத்தில் போட்டுள்ள பதிவில், "பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று (ஜூலை 16), திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள். மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார். சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே?" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









