கோவையில் மற்றொரு அதிர்ச்சி.. இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு.. டிஎஸ்பி மகன் கைது!

Coimbatore Crime News:கோவையில் இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் டிஎஸ்பி மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.  

Written by - R Balaji | Last Updated : Nov 12, 2025, 12:05 PM IST
  • கோவையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்
  • இளம் பெண்ணிடம் பணம், நகை பறிப்பு
  • டிஎஸ்பி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்
கோவையில் மற்றொரு அதிர்ச்சி.. இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் பறிப்பு.. டிஎஸ்பி மகன் கைது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயதான இளம் பெண் கோவையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பம்பிள் ஆப் எனும் டேட்டிங் ஆப் மூலம் கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த தருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்துள்ளனர். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில் தருண் அந்த இளம் பெண்ணிடம் நேரில் சந்தித்து பேசலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்த நிலையில்,  கடந்த 2ம் தேதி இரவு இரண்டு பேரும் சந்தித்தனர். பின்னர் இளம்பெண்ணை தருண் தனது எஸ்யூவி காரில் ஏற்றிக் கொண்டு நவக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுடன் 28 வயதான தருணின் நன்பர் தனுஷும் காரில் சென்றுள்ளார். 

பின்னர் அந்த இளம் பெண்ணை போட்டோ எடுத்து மிரட்டி அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் என மூன்று பவுன் நகைமற்றும் கூகுள் பே மூலம் ரூ. 90 ஆயிரம் பறித்துள்ளனர். அவர்கள் காரில் தப்பிச் செல்ல முயன்ற போது இளம் பெண் அவர்களிடம் தன்னை பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டுச் செல்லுமாறு கெஞ்சி உள்ளார். இதை அடுத்து அவரை கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துவிட்டு தரும் தப்பி சென்றார். இதனால் பதட்டமான பெண் இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பணம் நகை பறித்த தருண் திண்டுக்கல்லில் பணியாற்றி வரும் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கப்பாண்டி என்பவரின் மகன் எனத் தெரிய வந்தது. இதை அடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக தருணை கைது செய்தனர். அத்துடன் அவருடன் வந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவருடன் தருணுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தலைமறைவான வாலிபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தருண் இதுபோன்று வேறு பெண்களிடமும் நகை, பணம் பறித்து உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக கோவை விமான நிலையம் அருகே தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

மேலும் படிக்க: RSS-ல் பயிற்சி.. தேர்தல் ஆணையத்தில் பதிவி - திருமாவளவன் குற்றச்சாட்டு!

மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை புதன்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News