)
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா பகுதிக்கு செல்ல வரும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் கட்டாயமாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவாதி ஆகியோர்கள் விசாரித்தனர். வனம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நீதிமன்றம் இந்த புதிய கட்டுப்பாட்டை அறிவித்து உள்ளது.
இதுவரை ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வந்தது. அந்த நடைமுறை போலவே, அதிகமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்வதை கட்டுப்படுத்தவும், அங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் IIT சென்னை மற்றும் IIM பெங்களூரு ஆகிய அமைப்புகளின் நிபுணர்கள் குழு இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
E-Pass system is mandatory to enter Valparai from 1st of November 2025.
— Kishore Chandran (@tweetKishorec) September 19, 2025
ஊட்டி, கொடைக்கானலைப் போல் வால்பாறையிலும் நவம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.https://t.co/UIH6qM05WJ pic.twitter.com/fsuwNiYCul
- உதகைக்கும், கொடைக்கானலுக்கும் அனுமதிக்கப்படும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
- அரசு போக்குவரத்து பயன்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.
- சுற்றுலா பகுதிகளில் அதிகமாக கூடும் மக்கள் குழுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் வகுக்க வேண்டும்.
இவ்வாறு நிபுணர் குழு பரிந்துரைகளை வைத்திருந்த நிலையில் வளைகுடா மற்றும் வன பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்க அமைச்சரவை தலைமை செயலர் தலைமையில் விரைவில் கூட்டம் நடத்த வேண்டும் எனவும், இந்த நடைமுறைகளை நவம்பர் 1 முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்பதையும் அறிவுறுத்தி, தேவையான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால், வால்பாறை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு புதிய வெற்றி கிடைக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ