ஜெய்பீம் பார்க்க ஆர்வம்; முதல்வரை காப்பி அடிக்கும் அமைச்சர்

ஜெய் பீம் திரைப்படத்தை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 09:49 AM IST
ஜெய்பீம் பார்க்க ஆர்வம்; முதல்வரை காப்பி அடிக்கும் அமைச்சர் title=

சென்னை ஆவடியில் நடைப்பாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நிதி உதவியை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார். இந்த விழாவில் ஆவடி தொகுதிக்குட்பட்ட நடைப்பாதை வியாபாரிகளுக்கு 10000 ரூபாய் நிதி உதவி மற்றும் அடையாள அட்டையை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சா.மு.நாசர் நடைப்பாதை வியாபாரிககளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார். 

இதன் பின்னர் பேசிய அவர் திரைப்படங்கள் பார்பதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தற்போது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ள ஜெய் பீம் (Jai Bhim) திரைப்படத்தை பார்க்க ஆர்வமுடன் இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் (Minister Nasser) கூறினார். மேலும் கடந்த ஆட்சியை விட தமிழகத்தில் மழை வெள்ளத்தை வடிய செய்தது திமுக ஆட்சி தான் ஆனால் நானும் ரவுதான் என்ற வடிவேலு நகைச்சுவையை போல தானும் தமிழகத்தில் இருப்பதை காட்டிக்கொள்வதற்காகவே அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருப்பதாக அமைச்சர் நாசர் கூறினார்.

Also Read | ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய கேரள முன்னாள் அமைச்சர்!

முன்னதாக மக்களை தேடி மருத்துவம் திட்ட அரசு விழாவில் மாவட்ட ஆட்சியருடன் கலந்து கொண்ட அமைச்சர் மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகத்தை  தொடர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளுக்கு நடந்து சென்று வீடு வீடாக வழங்கிய அமைச்சர் மற்றும் ஆட்சியர் கோவில்பதாகை பகுதியில் சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினர்.

இது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமீப காலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் தேனீர் அருந்துவதும் அங்கு உள்ள பொதுமக்களிடம் உரையாடும் நிகழ்வுகள் நடப்பதை போல அமைச்சர்களும் தற்போது அதை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஜெய்பீம் விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News