Economic Survey of Tamil Nadu 2024 - 2025: மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25" (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்று (மார்ச் 13) தலைமைச் செயலகத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிற்கான முதல் பொருளாதார ஆய்வறிக்கை இதுவாகும்.
Economic Survey of Tamil Nadu: தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை
இதனை முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) வெளியிடும்போது, துணை முதலமைச்சரும், மாநில திட்டக் குழு துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன, நிதித்துறை துணை செயலாளர் செ.ஆ. ரிஷப் ஆகியோர் உடனிருந்தனர்.
Economic Survey of Tamil Nadu: பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்
பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது?: இந்த பொருளாதார ஆய்வறிக்கையில்,"வலுவான கொள்கையின் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதராம் வளர்ச்சிப்பாதையில் உள்ளது. மாநில வளர்ச்சியில் கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளதார வளர்ச்சி 2024 -2025 நிதியாண்டில் 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021–2022 முதல் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் அல்லது அதற்கு மேல் என்ற அடிப்படையில் நிலையாக உள்ளது.
1 டிரில்லியன் அமெரிக்க பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட தமிழ்நாடு அரசின் பொருளதார வளர்ச்சி ஆண்டுதோறும் 12 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். 2023–2024 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 27.22 லட்சம் கோடியாக உள்ளது. இதன்படி பொருளதார வளர்ச்சி 8.23 சதவீதமாக உள்ளது.
எந்தெந்த மண்டலங்கள் எவ்வளவு பங்களிப்பு?: மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8% உள்ள வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6% என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. 22.8% மக்கள்தொகை கொண்ட மேற்கு மண்டலம் GSDP-யில் 29.6% பங்களிப்பை வழங்குகிறது. 20.5% மக்கள்தொகை பங்கைக் கொண்ட தெற்கு மண்டலம் GSDP-யில் 18.8% பங்களிக்கிறது. கிழக்கு மண்டலம், 25.5% மக்கள்தொகையுடன், 15.1% என மிகக் குறைந்த GSDP பங்கைக் கொண்டுள்ளது.
உற்பத்தி துறையில் வளர்ச்சி: 2021-22 மற்றும் 2023-24 நிதியாண்டுகளுக்கு இடையில் உற்பத்தித் துறை 8.33% வளர்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத் துறை 9.03% வளர்ச்சி அடைந்துள்ளது. போக்குவரத்து உபகரணங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பல துணைத் துறைகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.
தனிநபர் வருமானம் உயர்வு: மேலும், தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சி பல ஆண்டுகளாக தேசிய சராசரியை விட தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது,"2022-23 நிதியாண்டில் இது ரூ. 2.78 லட்சமாக இருந்தது. இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தை விட 1.64 மடங்கு அதிகம். இதன் மூலம் தனிநபர் வருமானத்தில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகமாக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3.15 லட்சமாக உள்ளது. மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகமாக உள்ளது. தனிநபர் வருமானத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் முன்னணியில் உள்ளன. அதே நேரத்தில் சில தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைவாகவே உள்ளன.
இலக்கு வைக்கப்பட்ட தொழில்துறை முதலீடுகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மேம்பாடு மூலம் சமநிலையான பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்வது அனைத்து மாவட்டங்களிலும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
Tamil Nadu Budget 2025: 'எல்லோர்க்கும் எல்லாம்'
2025-26 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14) தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என்ற இலச்சினை
பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | '₹' டூ 'ரூ'.. முதல்வர் ஸ்டாலின் நீங்கள் இவ்வளவு முட்டாளா? - அண்ணாமலை சரமாரி கேள்வி!
மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 2 முக்கிய அறிவிப்புகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









