ED Raid At Minister KN Nehru House : அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், இளைய சகோதரர் மணிவண்ணன் மற்றும் அமைச்சர் கே என் நேருவின் மகன் கே என் அருண் நேருக்கு சொந்தமான சென்னையில் உள்ள டி வி ஹெச் தொடர்புடைய நிறுவனத்தில் சென்னையில் ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது குறுக்கு தெரு பகுதியில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் இல்லம், 10வது தெரு உள்ள ராமஜெயம் இல்லத்திலும், திருச்சி அரசு மருத்துவமனை பின்புறம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நேருவின் மகள் வீட்டிலும், தொடர்புடைய வீட்டில் மூன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று கோவை மாவட்டம் மசக்கி பாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் இளைய சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் மற்றும் தமிழக போலீசார் என பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கணக்கில் பல ஆவணங்கள் காட்டப்படாத, ஆக வந்த தகவல் அடிப்படையில் கமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பதிவெண் கொண்ட காரில் வந்த அமலகத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க |துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
மேலும் படிக்க| 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரஷாந்த் - இயக்குனர் ஹரி!









