சென்னை: முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக நேற்று இரவு டெல்லி சென்றுள்ளார்.
மேலும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று காலை டெல்லிக்கு கிளம்புவார் என்று கூறப்படுகிறது.
மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்துவது குறித்து முதல்வர் மோடியிடம் தெரிவிக்க உள்ளார்.
இன்று மாலை 5.45 மணிக்கு மோடியை சந்திக்க உள்ளார் பழனிசாமி. அதன் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு செல்லும் அவர் அங்கு பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய அரசு துறையில் உள்ள தமிழக உயர் அதிகாரிகளுக்கு விருந்து அளிக்கிறார்.