'2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்...' - இபிஎஸ் சொன்னது என்ன?

Edappadi Palanisamy: எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 26, 2025, 07:52 PM IST
  • திமுகவை 2026ஆம் ஆண்டில் நிச்சயம் விரட்டியடிப்பார்கள் - இபிஎஸ்
  • அண்ணா பற்றி பேச ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் அருகதை இருக்கிறதா - இபிஎஸ்
'2026 தேர்தலுக்கான என் முதல் வாக்குறுதி இதுதான்...' - இபிஎஸ் சொன்னது என்ன?

Edappadi Palanisamy: தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட X பதிவில், "நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு, அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அஇஅதிமுகவைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், 'அண்ணா பெயரை அதிமுக
அடமானம் வைத்துவிட்டது' என்கிறார். அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுகவுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?

Edappadi Palanisamy: 'எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் அதிமுக'

'அண்ணா- இதய மன்னா' என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுகவை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் அதிமுக.

Edappadi Palanisamy: 'அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்'

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!.

Edappadi Palanisamy: முதல் வாக்குறுதி இதுதான்

இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுகவை 2026ஆம் ஆண்டில் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!. திமுகவால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன். இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி" என குறிப்பிட்டுள்ளார். 

Edappadi Palanisamy: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை அவமரியாதை செய்யும் வகையில் வீடியோ ஒளிபரப்பட்டதாக கூறி, அதற்கு திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக மீது கடும் விமர்சனங்களை வைத்தன. முன்னதாக, இன்று திருப்பத்தூரில் நடந்த விழாவில் பேசிய அவர், "இந்த மண் பெரியார் பண்படுத்திய மண், அண்ணாவால் மேம்படுத்தப்பட்ட மண், இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். 

அதை கை கட்டி வேடிக்கை பார்க்கிறது அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள கூட்டம். அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டார்கள். இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள் நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க அனுமதிக்க கூடாது" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்டாரா விஜய்...? திருமா கேட்ட கேள்வி...!

மேலும் படிக்க | தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் படிக்க | வேலைவாய்ப்பு! அரசு பள்ளிகளில் பணியாற்ற விருப்பமா? - உடனே விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News