அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த குட் நியூஸ்

Minister Anbil Mahesh Announcement : அரசுப் பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2025, 01:15 PM IST
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா
  • அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
  • கீழடி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா..! அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த குட் நியூஸ்

Tamilnadu Government, Educational Tour, Minister Anbil Mahesh Announcement : அரசு பள்ளி மாணவர்களை விரைவில் கல்வி சுற்றுலாவாக கீழடி போன்ற தொல்லியல் அகழாய்வு இடங்களுக்கு கூட்டி செல்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொணரும் விதமாக அரசுப் பள்ளியில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 மாணவர்களுக்கு சென்னையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆறு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. 

குறிப்பாக ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் கலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அதில் சிறந்த முறையில் செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடையில் பேசியதாவது ; மாணவர்கள் பெறும் மதிப்பெண் மட்டுமல்ல, தனித் திறமை தான் அவர்களை தனித்துவமாக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவார். 3 வருடங்களுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது 34 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தற்போது 60 லட்சம் பேர் கலைச்சிற்பி திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. பரதம், நாடகம், ஓவியம், இசை பயிற்சி கடந்த 16ம் தேதியிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது. திறமையை வளர்க்க வாய்ப்பும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலாச்சாரத்தின் மூலமாக பண்பாட்டை வளர்க்கும் திட்டமாக உள்ளது. மாணவர்கள் கலைஞர்களாக மாறியுள்ளனர். நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் மட்டுமல்ல, ஜஸ்ட் பாஸ் வாங்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பது தான் எங்கள் நோக்கம். படிப்போடு சேர்ந்து திறமையை மாணவர்கள் வளர்ப்பது அவசியம். நமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது. 

அரசு பள்ளி மாணவ மாணவியர்களை கல்வி சுற்றுலாவாக கீழடிக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். நமது மாநிலத்தின் அகழாய்வு தளங்களை இளம் மாணவர்கள் நேரில் பார்ப்பதற்கும், நமது பண்பாட்டை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தொல்லியல் தளங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டத்தை விரைவில் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் பெறலாம்! எப்படி தெரியுமா? தமிழ்நாடு அரசு கொடுத்த அப்டேட்

மேலும் படிக்க | UPSC தேர்வர்களுக்கு... தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.25 ஆயிரம்... விண்ணப்பிப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News