Election Commission : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வாக்களிக்க தேவைப்படும் உதவிகளை சக்சம் செயலி (SAKSHAM APP) மூலமாக தெரிவித்து பயன்பெறலாம். 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் கழிப்பிட வசதி. குடிநீர் வசதி, சாய்வுத்தள வசதி, சக்கர நாற்காலி மற்றும் சக்கரநாற்காலியினை இயக்குவதற்கு உதவியாளர் ஆகிய வசதிகள் தேர்தல் ஆணையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான அறிவிப்பு
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க தேவைப்படும் உதவிகளை தெரிவிக்க சக்சம் செயலி (SAKSHAM APP) தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இச்செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை தெரிவித்தால் அவர்களுக்கான வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசு ஊழியர்களுகான அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசுப் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அத்தியாவசிய சேவையில் உள்ள பணியாளர்கள் (Service Voters) தங்களது தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்பும் ETPBMS (Electronically Transmitted Postal Ballot Management. System) நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (Returning Officers) ETPBMS ໙ Service Voter- கள் தபால் வாக்குச்சீட்டுகளை மின்னணு முறையில் அனுப்புவார்கள். அதன் பின்னர். Service Voter-கள் தங்களுக்கு கிடைக்கும் தபால் வாக்குச்சீட்டில் விருப்பமான வேட்பாளருக்கு வாக்களித்து, தேவையான அறிவிப்புகள் (Form 13A), உள்ளக உறை (Form 13B). வெளிப்புற உறை (Form 13C) மற்றும் வழிமுறைகள் (Form 13D) ஆகியவற்றுடன் முறையாக பூர்த்தி செய்து மீண்டும் அனுப்ப வேண்டும்.
மேலும், ETPBMS மூலம் அனுப்பப்படும் தபால் வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பான முறையில் (secured system) அனுப்பப்படுவதுடன், ஒவ்வொரு வாக்கும் சரிபார்ப்பு செயல்முறைகள் (QR Code / e-PBID) மூலம் உறுதி செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசையில், தபால் வாக்குகளுக்கான விதிமுறைகளின்படி எண்ணப்படும். மேலும், விதிமுறைகளுக்கு ஏற்ப பெறப்பட்ட சரியான தபால் வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே, Service Voter-கள் அனைவரும் ETPBMS வழிமுறைகளை முறையாக பின்பற்றி தங்களது வாக்குரிமையை பயன்படுத்திக்கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 -ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்து கீழ்கண்ட வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை சுதந்திரமாகவும், தடையின்றியும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 62-இன் படி வாக்குப்பதிவு நாளில் அனைத்து வாக்காளர்களும் தங்களுக்கான ஆளறி அட்டைகளுடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்களிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீலகிரி மாவட்ட மக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள்:
1. ஆதார் அட்டை.
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் (MGNREGA) பணி அடையாள அட்டை.
3. புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை/ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை.
5. ஒட்டுநர் உரிமம்.
6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card).
7. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் លរ ញ (Smart card issued by RGI and NPR).
8. இந்தியக் கடவுச்சீட்டு (Passport)
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
10. மத்திய/மாநில நிறுவனங்கள்/ நிறுவனங்களின் அரசுகள்/ பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட பொது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.
11. பாரளுமன்ற/சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
12 இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.
மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது அடையாள ஆவணங்களை சரிபார்த்து, வாக்களிக்கும் நாளில் கட்டாயம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் நடைபெறும் நாளில் ஒழுங்கும், அமைதியும் காத்திட அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தலைமை செயலாளர் மாற்றம்! கொதித்தெழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









