ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சி தான் எஸ்.ஐ.ஆர்.(SIR) அவசரம் -கனிமொழி எம்.பி

Kanimozhi Karunanidhi In Thoothukudi: தூத்துக்குடி ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சியாக தான் இன்று எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 7, 2025, 12:31 PM IST
ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சி தான் எஸ்.ஐ.ஆர்.(SIR) அவசரம் -கனிமொழி எம்.பி

Kanimozhi Karunanidhi Latest News: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தின் அவசரம் போன்ற விவரங்கள் பற்றி பேசினார். திமுக எம்பி கனிமொழி என்ன கூறினார்? என்பதை விரிவாக பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

பெண்கள் மீதான குற்றங்கள் குறித்த நிலைப்பாடு:

- பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவற்றைச் சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

- குற்றங்கள் நிகழும்போது, பழியைப் பாதிக்கப்பட்ட பெண் மீது சுமத்துவதை சமூகம் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

- முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு விரைவில் அழுத்தமான தண்டனை பெற்றுத்தர முழு முயற்சி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

- நடவடிக்கை எடுத்த பிறகும் கண்டனம் தெரிவிப்பது எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.

எஸ்ஐஆர் (SIR) தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டு:

- எஸ்ஐஆர் (Special Intensive Revision) தேர்தலுக்கு முன்பாக அவசர அவசரமாகக் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்றும், போதிய அவகாசம் கொடுத்து இதைச் சரியாகச் செய்ய முடியும் என்றும் கூறினார்.

- பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்களில் பலருடைய வாக்குரிமை பறிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இது ஜனநாயகத்தையே கொலை செய்யக்கூடிய முயற்சி என்று குற்றம் சாட்டினார்.

- தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பல வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சூழல் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

- இதை எதிர்த்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார்.

- முதல்வர் அவர்கள் பீகார் சென்று தனது முழு ஆதரவையும் அளித்திருப்பதை நினைவு கூர்ந்தார்.

சமீபத்திய பிரச்சனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்:

சமீபத்தில் நடந்த பிரச்சனைகளைக் கணக்கெடுத்து, அவற்றை நெறிப்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் குழு எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க - தமிழ்நாட்டில் SIR பணிகள்! உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்கள்!

மேலும் படிக்க - தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) இன்று தொடங்கியது!

மேலும் படிக்க - காரில் பெண் கடத்தல்...? இரவில் கேட்ட அலறல் சத்தம்... கோவையில் அதிகரிக்கும் குற்றங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News