டாஸ்மாக் அலுவலகத்தில் ED ரெய்டு; 3 முக்கிய மதுபான நிறுவனங்களில் சோதனை - பின்னணி என்ன?

Chennai ED Raid: சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை செய்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜர் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் தற்போது சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 6, 2025, 02:29 PM IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களின் வீட்டில் இன்று ரெய்டு.
  • திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் Accord டிஸ்டில்லர்ஸ் நிறுவன அலுவலகத்திலும் ரெய்டு
  • இதனால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் அலுவலகத்தில் ED ரெய்டு; 3 முக்கிய மதுபான நிறுவனங்களில் சோதனை - பின்னணி என்ன?

Chennai ED Raid: சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை செய்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜர் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் தற்போது சோதனை தொடங்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

Chennai ED Raid: மதுபான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மட்டுமின்றி அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அலுவலகம், சென்னை பாண்டி பஜாரில் உள்ள திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான Accord Distillers மதுபான நிறுவனத்தின் அலுவலகம், ஆயிரம் விளக்கில் உள்ள SNJ மதுபான நிறுவனத்தின் அலுவலகம், சென்னை தி.நகரில் உள்ள Kals Distilleries உள்ளிட்ட மதுபான நிறுவனங்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai ED Raid: பின்னணி என்ன?

இந்த 3 நிறுவனங்களும் டாஸ்மாக் நிறுவனம் மதுபானம் கொள்முதல்  செய்யும் முக்கிய நிறுவனங்களாகும். டாஸ்மாக்கிற்கு மதுபானம் விநியோகம் மற்றும் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளதாகவும், சில சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்திருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் இன்று காலையில் இருந்தே அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி தற்போது பிணையில் இருப்பதும் கவனிக்கத்தக்கது.    

Chennai ED Raid: எஸ்டிபிஐ தலைமை அலுவலகத்திலும் ரெய்டு

அதுமட்டுமின்றி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில அலுவலகத்தில் அமலாக்கத்துறை இன்று சோதனை செய்தது. கடந்த சில நாட்களூக்கு முன்பு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஸி-யை டெல்லி விமானநிலையத்தில் வைத்து சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்காக அமலாக்கதுறையினர் கைது செய்தனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டங்கள் அக்கட்சியினரால் நடத்தப்பட்டது. நேற்று கூட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே சென்னை மாவட்டத்தை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியீனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் மண்ணடி பகுதியில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கதுறையினர் சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் ஒரு மணி நேரமாக சோதனை செய்துவரும் நிலையில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இச்சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | உண்மையான பேரினவாதிகளும் தேசவிரோதிகளும் இந்தி வெறியர்கள்தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேலும் படிக்க | மொத்தமும் டிராமாவா! ப.வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் நடந்தது என்ன

மேலும் படிக்க | தமிழக அரசுக்கே ஐடியா கொடுக்கலாம்! - பட்ஜெட் குறித்து கருத்து சொல்ல இதை பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News