)
Edappadi Palanisamy, Magalir Urimai Thogai Announcement : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப அட்டை வைத்துள்ள பெண்களுக்கு 1,500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2026, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கிவிட்டார். மேட்டுப்பாளையம், கோவை சுற்றுப் பயணத்தை முடித்த அவர், இரண்டு நாட்களாக விழுப்புரத்தில் தொகுதிவாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
இன்று வானூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அதிமுக 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா 1500 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். திமுக மக்களிர் உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்து வெறும் 18 மாதங்கள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், அதுவும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். இப்போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் 30 லட்சம் பேரை இந்த திட்டத்தில் இணைப்பதாக கூறி மக்களை திசை திருப்ப பார்ப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போதே அதிமுக இந்த அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அதிமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறப்போகும் முக்கிய அறிவிப்பாக இருக்கப்போகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பதற்கு முன்பாகவே அதிமுகவின் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமைத் தொகை திட்ட அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். ஏனென்றால், பெண்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருகக்கூடிய திட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டே எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும், பெண்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு திமுக என்ன மாதிரியான பதலடி கொடுக்கப்போகிறது என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏனென்றால் மகளிர் உரிமைத் தொகை 1500 ஆக உயர்த்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துவிட்டதால், திமுகவும் இப்போது மகளிர் உரிமைத் தொகை பணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், திமுக இதை செய்யுமா? அல்லது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வேறு விதமான மக்கள் நல திட்ட அறிவிப்பு மூலம் சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ