ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்... மருத்துவமனை செல்லும் ஸ்டாலின்?

EVKS Elangovan Passed Away: ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 14, 2024, 01:12 PM IST
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்... மருத்துவமனை செல்லும் ஸ்டாலின்? title=

EVKS Elangovan Passed Away, Political Leaders Condolences:​ ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நுரையீரல் தொற்று பாதிப்பால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதாவது நேற்று இரவிலிருந்தே அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க | இளங்கோவன் மரண செய்தியில் சர்ச்சை! இறப்பிற்கு முன்னரே வெளியான இரங்கல்

தற்போது அவர் உடல்நிலை மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைகள் குறித்து கேட்டிருந்தார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட  தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு முதல்வர் செல்லக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News