)
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நாளை அக்டோபர் 28ஆம் தேதி மாலை நேரத்தில் ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டணம் மற்றும் காக்கிநாடா இடையில் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் வேகமாக வலுப்பெற்று வந்தாலும், இதனால் சென்னைக்கு பெரும் பாதிப்பு ஏற்படாது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
ஆந்திரா & ஒடிசா
புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருக்கும். கடலோர பகுதிகளில் கடல் அலைகள் ஒரு மீட்டர் உயரம் வரை எழும் அபாயமும் உள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தென் ஒடிசா மாநிலங்களில் பலத்த மழையும், பலத்த காற்று வீச்சும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மையம் காக்கிநாடா மற்றும் ஒடிசா மாநில கோபால்பூருக்கு அருகில் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மோந்தா புயல் தீவிரமாக வளர்ந்து வரும் நிலையில், 12 மணி நேரத்தில் கடலோரம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின்னர், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயர் எச்சரிக்கை வழங்கி பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மசூலிப்பட்டணம் - காக்கிநாடா பகுதி மிகவும் பாதிக்கப்படும் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திரா மாநிலம் முழுவதும் பல கடலோர கிராமங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் சில பகுதிகளில் கனமழை
ஒடிசா மாநிலம் இந்த புயலால் நேரடி பாதிப்புக்கு உள்ளாவதில்லை எனவும், ஆனால் அதன் விளிம்பு காரணமாக சில பகுதிகளில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டு, குறைந்த படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு திரும்பியுள்ளன.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
மோந்தா புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மேகங்கள் சென்னை அருகே வர அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சென்னையில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தற்போது புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 780 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ